பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா: கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு 463 நிலைப்படுத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ஏவெய்ல் நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

प्रविष्टि तिथि: 14 FEB 2024 3:01PM by PIB Chennai

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 12.7 மி மீ நிலைப்படுத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகளை (எஸ்ஆர்சிஜி- SRCG) மொத்தம் ரூ.1752.13 கோடி செலவில் தயாரித்து வழங்குவதற்காக கான்பூரின் ஏவெய்ல் (AWEIL) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம்  இன்று (பிப்ரவரி 14, 2024) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சமச்சீரற்ற சூழல் உள்ள நிலையில் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சிறிய இலக்குகளை துல்லியமாக எதிர்கொள்ள இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் திறனை எஸ்ஆர்சிஜி மேம்படுத்தும்.

இந்தக் கொள்முதல் "பாதுகாப்புத் துறையில் தற்சார்பு" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு மேலும் ஊக்கமளிக்கும். இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளில் 125-க்கும் மேற்பட்ட இந்திய விற்பனையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு உற்பத்தியில் ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தும்.

***

(Release ID: 2005851) 

ANU/PKV/PLM/RS/KRS


(रिलीज़ आईडी: 2005984) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu