ஆயுஷ்
யுனானி தினம் 2024, ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாடு
Posted On:
12 FEB 2024 6:26PM by PIB Chennai
புதுதில்லியின் புசாவில், யுனானி மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த யுனானி தினம் 2024, யுனானி மருத்துவத்திற்கான தேசிய மாநாடு மற்றும் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாட்டின் போது ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடேச்சா பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியாவின் உலகளாவிய தலைமையை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆதாரம் அடிப்படையிலான அறிவியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஆயுஷ் துறையில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி தரவுகளை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் புதுதில்லியில் உள்ள இந்திய முறை மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வைத்ய ஜெயந்த் தியோபுஜாரி உள்ளிட்ட ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய வைத்யா ராஜேஷ் கோடேச்சா, யுனானி தினத்தின் முக்கியத்துவம், மக்களின் துயர் துடைப்பதில் யுனானி மருத்துவம் கணிசமான பங்கை அங்கீகரிக்கிறது என்று கூறினார். யுனானி தினம் 2024-ன் கருப்பொருளான "ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்துக்கான யுனானி மருத்துவம்" என்பதை எடுத்துரைத்த அவர், பூமியின் நலனுக்கான பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதில் இந்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், சுகாதாரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அவர்களின் முழுமையான அணுகுமுறையை எடுத்துரைத்தார். சுகாதார உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி ஒத்துழைப்புகள், ஏற்றுமதி மேம்பாட்டு வழிமுறைகள், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையின் உலகளாவிய விரிவாக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை அவர் குறிப்பிட்டார்.
-------------
ANU/PKV/BS/RS/KRS
(Release ID: 2005400)
Visitor Counter : 102