சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தெய்வீக கலைவிழா: திரிபுரா ஆளுநர் திரு இந்திரசென் ரெட்டி நல்லு மற்றும் மத்திய இணையமைச்சர் பிரதிமா பவுமிக் ஆகியோர் பரிசளிக்கும் நிகழ்ச்சியுடன் நிறைவு
Posted On:
12 FEB 2024 2:09PM by PIB Chennai
அகர்தலா, குழந்தைகள் பூங்காவில் நடைபெற்ற ஆறு நாள் தெய்வீக கலைவிழா, திரிபுரா ஆளுநர் திரு இந்திரசென் ரெட்டி நல்லு மற்றும் மத்திய இணையமைச்சர் பிரதிமா பவுமிக் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகளை வழங்கியதோடு நிறைவடைந்தது.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை ஏற்பாடு செய்திருந்த ஆறு நாள் விழாவை 2024, பிப்ரவரி 6 அன்று திரிபுரா மாநில அமைச்சர்கள் திரு ரத்தன் லால் நாத் மற்றும் திரு டிங்கு ராய் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் இந்த தேசிய அளவிலான மேளாவுக்கு "தெய்வீக கலை விழா" என்று பெயரிடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, போபால், குவஹாத்தி, இந்தூர், ஜெய்ப்பூர், வாரணாசி, செகந்திராபாத், ஹைதராபாத், பெங்களூரு, கர்நாடகா, சென்னை, பாட்னா, சூரத், நாக்பூர் ஆகிய இடங்களில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து, அகர்தலாவில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தவிழாவின் நிறைவு விழாவில் தேசிய வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் திரு நவீன் ஷா, எம்.எல்.ஏ., எஸ்.சி நலக் கழகத்தின் தலைவர் திரு பினாகி தாஸ் சவுத்ரி, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் மூத்த சமூக ஆர்வலர் திரு உத்தம் ஓஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், அலிம்கோ மற்றும் ஊடக பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
திரிபுராவில் முதன்முறையாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது அமைப்புகளுக்காக "தெய்வீக கலை விழா" மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆறு நாள் விழாவில் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 60 மாற்றுத்திறனாளி கைவினைஞர்கள், தொழில்முனைவோர், கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்தினர்.
***
Release ID: 2005219)
ANU/AD/BS/RS/KRS
(Release ID: 2005352)