உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 09 FEB 2024 3:35PM by PIB Chennai

புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்ததற்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா பதிவிட்டுள்ளதாவது:

புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்திருப்பது, முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட மகத்தான மனிதர்கள் மீது நமது தேசம் வைத்திருக்கும் நன்றி உணர்வுக்கு ஒரு சான்றாகும். நமது தேசத்தின் உணவு நெருக்கடி காலத்தை, உணவுப் பாதுகாப்பு காலமாக மாற்றும் கடினமான பணியை தனது அறிவியல் திறமையால் நிறைவேற்றிய ஒரு அரிய மேதையாக சுவாமிநாதன் அவர்களை நமது வரலாறு நினைவுகூர்கிறது. சிறந்த கல்வியாளரான சுவாமிநாதனின் தேடல்கள் அற்புதமான ஆராய்ச்சிப் பணிகளுக்கு வழிவகுத்தது மட்டுமின்றி, பாரம்பரியத்தைத் தொடர ஏராளமான அறிவார்ந்தவர்களை மற்றும் திறமையானவர்களை உருவாக்கியது. இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், உயரிய பாரத ரத்னா விருதால் அலங்கரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவிற்குப் பிரதமர் திருநரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

------

(Release ID: 2004431)
ANU/SMB/PKV/KPG/RR


(रिलीज़ आईडी: 2004493) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Tamil