வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தரம் முக்கியமானது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 07 FEB 2024 6:49PM by PIB Chennai

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தரம் முக்கியமானது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லி பாரத மண்டபத்தில் இந்திய தர கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த தரத்திற்கான இளைஞர் திருவிழா நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த விழா நாட்டின் இளைஞர்களிடையே தரம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாம் அனைவரும் தரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அனைத்திலும் தரமானதை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

குறைபாடற்ற பொருட்கள் உற்பத்தி என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கை குறித்து பேசிய அவர், தர உணர்வு அனைவருக்கும் முக்கியமானது என்று கூறினார்.

இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.

2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதன் ஒரு பகுதியாக தரம் தொடர்பான இந்த இளைஞர் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தில் தில்லி பல்கலைக்கழகம், தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

---

(Release ID: 2003652)
ANU/AD/PLM/KPG/KRS


(रिलीज़ आईडी: 2003720) आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi