பாதுகாப்பு அமைச்சகம்

உயர்திறன் மிக்க தற்சார்பு விண்வெளிப் பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கான தருணம் இது என்று முப்படைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் தெரிவித்தார்

Posted On: 07 FEB 2024 2:42PM by PIB Chennai

உயர்திறன் மிக்க தற்சார்பு விண்வெளிப் பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கான தருணம் இது என்று முப்படைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் தெரிவித்தார். தில்லி கண்டோன்மென்டில் உள்ள மானக்ஷா மையத்தில் 2024 பிப்ரவரி 7 அன்று மூன்று நாள் விண்வெளிக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியான 'டெஃப்சாட்டை'  தொடங்கி வைத்த ஜெனரல் அனில் செளகான், விண்வெளி விரிவாக்கம் முதல் ஆய்வு வரை, நாட்டிற்கான பெரிய இலக்குகளை அரசு உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மனிதகுலத்திற்கும், போரில் ஈடுபட்டுள்ள ஆயுதப் படைகளுக்கும் விண்வெளியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முப்படைத் தளபதி, நிலம், வான், கடல், இணையம் போன்ற களங்களில் போர்த் திறன்களை மேம்படுத்த விண்வெளியை ஒரு சக்தியாகப் பயன்படுத்தலாம் என்று கூறினார்.

ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்த விண்வெளியை மூலதனமாக்குவதற்கான அரசின் முக்கிய முயற்சிகளைக் குறிப்பிட்ட முப்படைத் தளபதி, விண்வெளிப் பாதுகாப்பு 2022-ன் ஒரு பகுதியாக விண்வெளி தொடர்பான 75 சவால்களைப் பற்றி குறிப்பிட்டார். "இந்த முயற்சியின் கீழ், மொத்தம் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும் நான்கு ஒப்பந்தங்கள் ஆவணப்படுத்தலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன என்று அனில் செளகான் கூறினார்.

***

ANU/SMB/IR/RR/KV(Release ID: 2003539) Visitor Counter : 74