ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"நில மேலாண்மை நவீனமயமாக்கலில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது" குறித்து மாநிலங்களின் வருவாய் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் தேசிய மாநாட்டை மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 07 FEB 2024 11:48AM by PIB Chennai

"நில மேலாண்மை நவீனமயமாக்கலில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்" குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங்  நாளை (08.02.2024) புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். மாநிலங்களைச் சேர்ந்த வருவாய் மற்றும் பத்திரப் பதிவுத்துறைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள்  இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை நிலவளத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயல்முறைகள், அதன் தாக்கம், நேரம், செலவு, மற்றும் நிலம் தொடர்பான சேவைகளை எளிதாக்குவது குறித்தும் நில நிர்வாகத்தை நவீனமயமாக்குவதில் நல்ல நடைமுறைகள் தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்

 

மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங்கள் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரை இந்த இந்த மாநாடு ஒருங்கிணைக்கும். யோசனைகளைப் பரிமாறிக் கொள்ளவும், புதுமைகளை வெளிப்படுத்தவும், வெற்றிகரமான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், தீர்வுகளை அடையாளம் காணவும், எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு உதவும்.

----

ANU/SMB/PLM/KPG/KV

 


(Release ID: 2003440) Visitor Counter : 130


Read this release in: English , Urdu , Hindi , Manipuri