உள்துறை அமைச்சகம்

மத்திய ஆயுதப்படைகளில் பெண்கள்

Posted On: 06 FEB 2024 5:48PM by PIB Chennai

மத்திய ஆயுத காவல் படைகள் (சிஏபிஎஃப்) மற்றும் அசாம் ரைபிள்ஸ் (ஏஆர்) ஆகியவற்றில் தற்போதுள்ள பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 41,606 ஆகும். மத்திய ஆயுத காவல் படை மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பெண் பணியாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள்:

  • அச்சு / மின்னணு ஊடகங்கள் மூலம் பரவலான விளம்பரம் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய ஆயுத காவல்படைகளில் ஆட்சேர்ப்பின் போது பெண் விண்ணப்பதாரர்களுக்கு, உடற்தகுதித் தேர்வு (பி.எஸ்.டி) மற்றும் உடல் திறன் தேர்வு (பி.இ.டி) ஆகியவற்றில் ஆண்களுடன் ஒப்பிடும்போது தளர்வுகள் உள்ளன.
  • மத்திய அரசின் கீழ் ஏற்கனவே உள்ள மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு போன்ற வசதிகள் மத்திய ஆயுத காவல் படையின் பெண் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
  • மத்திய ஆயுதக் காவல் படையில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுக்கு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் பகல் நேரப் பராமரிப்பு மைய வசதிகள் செயல்படுத்தப்படுகின்றன.
  • பெண் பணியாளர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கவும், புகார்களை விரைந்து விசாரிக்கவும் அனைத்து மட்டங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ஆண் பணியாளர்களுக்கு இணையாக பெண் பணியாளர்களுக்கு அவர்களின் முன்னேற்றத்தில் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2003161)
ANU/PKV/PLM/RS/KRS



(Release ID: 2003239) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi