உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

Posted On: 06 FEB 2024 4:54PM by PIB Chennai

நாட்டின் வேளாண் ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 2014-15 ஆம் ஆண்டில் 13.7 சதவீதமாக இருந்தது.  இது 2022-23 ஆம் ஆண்டில் 25.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற மத்திய அரசின் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் சிறந்த  விநியோகச் சங்கிலி நிர்வாகத்துடன் கூடிய நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் செயலாற்றி வருகிறது. இந்தத் திட்டம் நாட்டின் உணவு பதப்படுத்தும் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பது மட்டுமின்றி, வேளாண் விளைபொருட்கள் வீணாவதைக் குறைக்கவும், பதப்படுத்தும் அளவை அதிகரிக்கவும், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவுகிறது.

2 லட்சம் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப, நிதி மற்றும் வணிக ஆதரவை வழங்குவதற்காக, மத்திய அரசின் நிதியுதவித் திட்டமான குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறையை மேம்படுத்த, 2021-22 முதல் 2026-27 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

இவை தவிர, வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், போன்ற தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ஷோபா கரந்தலஜே இத்தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2003094)

ANU/PKV/PLM/RS/KRS



(Release ID: 2003194) Visitor Counter : 43


Read this release in: English , Urdu , Hindi , Telugu