பிரதமர் அலுவலகம்
குவஹாத்தியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
04 FEB 2024 3:10PM by PIB Chennai
பாரத் மாதா கி - ஜே
பாரத் மாதா கி - ஜே
அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் சர்பானந்த சோனோவால் அவர்களே, ராமேஸ்வர் தெலி அவர்களே, அசாம் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, பல்வேறு மன்றங்களின் தலைவர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்!
அன்னை காமாக்யாவின் ஆசியுடன், மீண்டும் ஒருமுறை அசாமின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை உங்களுக்கு அர்ப்பணிப்பதில் நான் பெருமையடைகிறேன். சிறிது நேரத்திற்கு முன்பு ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் அல்லது தொடக்க விழா நடைபெற்றது. இந்தத் திட்டங்கள் அனைத்தும், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுடன், தெற்காசியாவின் பிற நாடுகளுடனான தொடர்பை வலுப்படுத்தும். இந்தத் திட்டங்கள் அசாமில் சுற்றுலாத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, விளையாட்டுத் திறமைகளுக்கு புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்தத் திட்டங்கள் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார மையங்களில் அசாமின் பங்கை விரிவுபடுத்தும். இந்தத் திட்டங்களுக்காக அசாம் மற்றும் வடகிழக்கில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
இன்று நடக்கும் அனைத்து பணிகளுக்கும் ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது. நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையே குறிக்கோள். நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதே இலக்கு. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றுவதே இலக்கு. இந்த விஷயத்தில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளன. இப்போது, மா காமாக்யாவின் ஆசீர்வாதம் கணிசமாக அதிகரிக்கப் போகிறது. அதனால்தான் நண்பர்களே, அசாமின் அற்புதமான, தெய்வீகச் சொரூபத்தை என்னால் காண முடிகிறது. உங்கள் கனவுகள் நனவாகும், நாங்கள் அதை எங்கள் கண்களால் பார்ப்போம், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
பாரத் மாதா கி - ஜே !
மிகவும் நன்றி!
***
(Release ID: 2002375)
ANU/PKV/BS/AG/RR
(Release ID: 2002928)
Visitor Counter : 90
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam