நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்த 14 ரயில் திட்டங்கள்

Posted On: 05 FEB 2024 6:09PM by PIB Chennai

அதிகரித்து வரும் தேவைகளுக்கு இடையே நிலக்கரி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண நிலக்கரி தளவாடக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த நிலக்கரி விநியோகத் திட்டத்தை நிலக்கரி அமைச்சகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரயில் பாதைகளை அமைத்தல், ரயில்வே கட்டமைப்பின் திறனை அதிகரித்தல், ரயில் இணைப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நிலக்கரி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விநியோக வசதிகள் / உள்கட்டமைப்புகள் நாட்டின் நீண்டகால உற்பத்தித் திறன் கணிப்புகளுக்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளன.

நிலக்கரியை வெளிக்கொணர்வதை மேம்படுத்த 14 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றில் ஐந்து ரயில் பாதைகள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மற்றவை பல்வேறு கட்டுமானப் பணிகளில் உள்ளன.

இவை தவிர, பசுமை எரிசக்தி வழித்தடத் திட்டங்கள், அதிக அடர்த்தி கொண்ட கட்டமைப்புத் திட்டங்கள், ரயில் சாகர் திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் பல ரயில் திட்டங்களை ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, நிலக்கரியை விநியோகிப்பதற்காக கடலோர கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி, சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

****

(Release ID: 2002730)

ANU/SM/IR/KPG/KRS

 


(Release ID: 2002771) Visitor Counter : 93


Read this release in: Kannada , English , Urdu , Hindi