குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நமீபியா குடியரசின் அதிபர் டாக்டர் ஹேஜ் ஜி ஜின்கோப் மறைவுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

प्रविष्टि तिथि: 05 FEB 2024 1:39PM by PIB Chennai

"மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, நமீபியா குடியரசின் அதிபர் டாக்டர் ஹேஜ் ஜி ஜின்கோபின் துயரமான மறைவுச் செய்தியை இந்த அவைக்குத் தெரிவிக்கிறேன். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி, நமீபிய அரசியலமைப்பை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையின் தலைவர், சுதந்திர நமீபியாவின் முதல் பிரதமர் மற்றும் அந்நாட்டின் 3-வது அதிபராவார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனது மக்களின் நலனுக்காகவும், தனது நாட்டின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்தார். அதிபர் ஜெயின்கோப் இந்தியாவின் நண்பராகத் திகழ்ந்தார். 2022 செப்டம்பரில் 8 நமீபிய சிறுத்தைகளை இந்தியாவுக்கு அளிக்க உதவியதில் அதிபர் ஜின்கோப்பின் பங்களிப்புப் பெரிதும் பாராட்டப்படுகிறது.

"இந்த அவையின் சார்பில் நமீபிய அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நாம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் நமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். "

டாக்டர் ஹேஜ் ஜி ஜின்கோபின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-----

ANU/SMB/IR/KPG/KV


(रिलीज़ आईडी: 2002594) आगंतुक पटल : 127
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati