புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

தமிழக கடலோரப் பகுதியில் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை அரசு கோருகிறது

Posted On: 02 FEB 2024 5:33PM by PIB Chennai

தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடல் காற்றாலை மின்சாரத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை மத்திய அரசு கோரியுள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் கடலோரக் காற்றாலைத் திட்டங்களை மேம்படுத்த திறந்த அணுகல் அடிப்படையில், ஒவ்வொன்றும் ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட நான்கு தொகுதிகளுக்கு சர்வதேச போட்டி ஒப்பந்தப்புள்ளி மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த ஏற்பாட்டின் கீழ், ஒவ்வொரு தொகுதிக்கும் ஏலத்தை வெல்லும் டெவலப்பர்கள் ஒரு ஜிகாவாட் கடலோர காற்றாலை மின் திறனை அமைத்து, திறந்த அணுகலின் கீழ் நுகர்வோருக்கு நேரடியாக மின்சாரத்தை விற்பனை செய்வார்கள். மேலும் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தற்போது அதிக கட்டண வரம்பில் உள்ள தொழில்கள் போன்ற நிறுவனங்களுக்கு விற்கப்படும்.

கடற்பகுதி காற்றில் நன்மைகள் பல உள்ளன. இது நிலம் கிடைப்பதில் உள்ள தடைகளை நீக்குகிறது. இது அதிக திறன் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், கடற்பகுதி காற்றாலை விசையாழிகளின் செயல்திறன் கரையோர காற்றாலை விசையாழிகளை விட அதிகமாக உள்ளது; ஒவ்வொரு விசையாழியும் 15 மெகாவாட் திறன் கொண்டதாகும்.

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரசின் சூரிய எரிசக்திக் கழகம் மூலம் கடல் கடந்த காற்றாலை மின் உற்பத்திக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. தேவையான அனைத்து சுற்றுச்சூழல் அனுமதிகளும் பெறப்பட்ட பின்னர் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகத் தலைவராக இந்தியா ஏற்கெனவே உருவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தை மற்றொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்லும்.

----

(Release ID: 2001947

ANU/AD/PKV/KPG/KRS



(Release ID: 2002033) Visitor Counter : 108


Read this release in: English , Urdu , Hindi , Punjabi