சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருத்துவக் கல்வியில் அடைந்த முன்னேற்றம்

மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் 157 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன

Posted On: 02 FEB 2024 3:11PM by PIB Chennai

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளதுடன், எம்பிபிஎஸ் / முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களையும் அதிகரித்துள்ளது. 2014-க்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 706-ஆக 82% அதிகரித்துள்ளது. மேலும், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை தற்போது 112 சதவீதம் அதிகரித்து 1,08,940 ஆகவும், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 31,185 ஆக இருந்த முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை தற்போது 70,645 ஆகவும் 127 சதவீதம் அதிகரித்துள்ளது.

வடகிழக்கு மற்றும் சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், பிற மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி பகிர்வுடன் ஏற்கனவே உள்ள பின்தங்கிய பகுதிகள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, தற்போதுள்ள மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான மத்திய நிதியுதவி திட்டத்தை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிர்வகிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், திட்டமிடப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளும் மூன்று கட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன,  இவற்றில் 108 மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

'தற்போதுள்ள மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல்' என்பது மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் 157 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 19 இடங்களில் இளங்கலை படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2001819)

ANU/SMB/BS/AG/KRS



(Release ID: 2001993) Visitor Counter : 56


Read this release in: English , Urdu , Hindi , Marathi