ரெயில்வே அமைச்சகம்
67-வது அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்டத்தை லக்னோவில் பிப்ரவரி 12 முதல் 16 வரை ஆர்.பி.எஃப் நடத்துகிறது
Posted On:
02 FEB 2024 12:40PM by PIB Chennai
2024 பிப்ரவரி 12 –ம் தேதி முதல் 16-ம் தேதி வரை லக்னோவில் 67-வது அகில இந்திய காவல்துறை பணித்திறன் கூட்டத்தை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) நடத்த உள்ளது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அகில இந்திய காவல்துறை பணித்திறன் கூட்ட மத்திய ஒருங்கிணைப்புக் குழுவால் ஆர்.பி.எஃப் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட அமலாக்க வட்டாரங்களில் புகழ்பெற்ற இந்த நிகழ்வு, உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக குற்றங்களை அறிவியல் பூர்வமாகக் கண்டறிதல் மற்றும் புலனாய்வு செய்வதில் காவல்துறை அதிகாரிகளிடையே சிறப்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நவீனமயமாக்கலை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவா, 67வது அகில இந்திய காவல் பணித்திறன்களுக்காக ரயில்வே பாதுகாப்புப் படையின் தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்ட பிரத்யேக மொபைல் பயன்பாடு மற்றும் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளங்கள் தகவல்தொடர்புகளை ஒழுங்குபடுத்தவும் , நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கவும், ஆட்டோபோட் அடிப்படையிலான பன்மொழி விவாதங்கள் போன்ற சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர் நட்பு இடைமுகங்கள், பங்கேற்பாளர் பதிவு, நிகழ்வுகளின் நேரடி கண்காணிப்பு, டிஜிட்டல் சான்றிதழ்கள், மின்-பிரசுரங்கள், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற வலுவான அம்சங்களுடன், பங்கேற்பாளர்களிடையே வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது.
67 வது அகில இந்திய காவல் பணித்திறன் கூட்டம், சட்ட அமலாக்க வல்லுநர்கள் ஒன்றிணைந்து, கற்றுக்கொள்ளவும், புலனாய்வு சிறப்புக்கான அவர்களின் கூட்டு முயற்சியை வலுப்படுத்தவும் அழைப்பு விடுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2001762
----
ANU/SMB/PKV/KPG/KV
(Release ID: 2001830)
Visitor Counter : 125