உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
சென்னை உட்பட 8 நகரங்களை அயோத்தியுடன் இணைக்கும் புதிய விமான சேவைகள்- மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை திரு ஜோதிராதித்யா சிந்தியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
Posted On:
01 FEB 2024 7:27PM by PIB Chennai
தில்லி, சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர், பாட்னா, தர்பங்கா, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை திரு ஜோதிராதித்யா சிந்தியா காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அயோத்திக்கு பக்தர்களின் வருகையை இந்த விமான சேவைகள் எளிதாக்கும் என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், உத்தரப்பிரதேசத்தில் விமான நிலையங்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து பத்தாக இரட்டிப்பாகியுள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தில் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து அயோத்திக்கு தினமும் இயக்கப்படும் ஸ்பைஸ் ஜெட் விமானம் பகல் மணி 12:40-க்கு புறப்பட்டு மாலை மணி 03:15க்கு அயோத்தி சென்றடையும்.
அயோத்தியில் மாலை 4 மணிக்கு புறப்படும் இந்த விமானம் இரவு மணி 07-20க்கு சென்னை வந்தடையும்.
***
(Release ID: 2001633)
ANU/SMB/PLM/KRS
(Release ID: 2001660)
Visitor Counter : 118