கனரகத் தொழில்கள் அமைச்சகம்

மத்திய அரசு அறிவித்துள்ள லட்சியத் திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளன

Posted On: 01 FEB 2024 2:29PM by PIB Chennai

சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரிவுப்படுத்தும் நோக்கில், அவற்றின் உற்பத்தி மற்றும் மின்னேற்றிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான உத்திசார் முயற்சிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

பொது போக்குவரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அதன் பயன்பாட்டு நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனப் பயன்பாட்டிற்கான லட்சிய திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதாக நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று 2024-25-ம் நிதியாண்டிற்கான  இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டம், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க செய்யும் நோக்கில், அதன் உற்பத்தி மற்றும் மின்னேற்றிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான உத்திசார் முயற்சிகளில் கவனம் செலுத்துவதற்கு உதவிடும்.

பொதுப்போக்குவரத்தை  மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பிரத்யேக கவனம் செலுத்துவதுடன் மின்சார வாகனங்களின் விரிவான பயன்பாட்டிற்கு உத்வேகம் அளிப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். மின்சார பேருந்துகளை இயக்கி வருபவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கும் வகையில், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கட்டணம் செலுத்தும் நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்று கூறினார். இத்தகையை நடவடிக்கைகள் பொதுப் போக்குவரத்துக்கு புத்துணர்ச்சியை அளிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி சேமிப்புடன் கூடிய போக்குவரத்திற்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக இந்தியாவை உருவெடுக்க செய்யும் வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நடவடிக்கைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இதனை கருத்தில் கொண்டு, நாட்டில் தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.  இதனை செயல்படுத்தும் வகையில் மத்திய கனரக தொழில்துறை மற்றும்  வாகன உற்பத்தித்துறை ஆகியவை தயாராக உள்ளது.

மத்திய அரசின் இந்த முயற்சிகள் தூய்மையான மற்றும் பசுமை எரிசக்திக்கான எதிர்காலத்தை பிரதிப்பலிப்பதுடன்,  மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களின் நீடித்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

***

(Release ID: 2001279

AD/SV/RS/KRS



(Release ID: 2001634) Visitor Counter : 89