நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவமனைகளில் அம்ரித் மருந்தகங்களைத் திறக்க உள்ளது

Posted On: 31 JAN 2024 3:47PM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது  பணியாளர்களுக்கு தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதார வசதிகளை உறுதி செய்யும் வகையில், அந்நிறுவனத்திறகு சொந்தமான  மருத்துவமனைகளில் அம்ரித் மருந்தகங்களைத் திறக்கும் முதல் நிலக்கரி நிறுவனமாகும். சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் தனது மருத்துவமனைகளில் அம்ரித் மருந்தகங்களை அமைக்க சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

முதல்கட்டமாக பிலாஸ்பூர், கெவ்ரா, சோஹாக்பூர், சிரிமிரி ஆகிய பகுதிகளில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் தலைமையகம், மத்திய மருத்துவமனைகளில் அம்ரித் மருந்தகங்கள் அமைக்கப்படும்.

இந்த மருந்தகங்கள் பொதுவான நோய்கள், அவசர  சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகள் போன்றவற்றை அதிகபட்ச மானிய விலையில் வழங்கும்.  இந்த மருந்தகங்களுக்கு வரும் பணியாளர்கள்  மற்றும் புறநோயாளிகளுக்கு இது பெரிதும் பயனளிக்கும்.

 

அம்ரித் மருந்தகங்கள் மூலம் ஊழியர்களுக்கு மருந்துகள் நேரடியாக வழங்கப்படுவதால், மருத்துவ செலவுகளைக் குறைக்க உதவும். இதன் மூலம் நோயாளிகளுக்கு தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், மருத்துவம் சார்ந்த வளங்களை உத்திசார் வகையில் பயன்படுத்தவும் அந்த  நிறுவனத்திற்கு உதவிடும்.

2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அம்ரித் மருந்தகம், புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை பொதுமக்களுக்கு அதிகபட்ச மானிய விலையில் வழங்குவதற்காக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு முன்னோடி திட்டமாகும். தற்போது நாட்டில் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 300-க்கும் மேற்பட்ட அம்ரித் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

***

(Release ID: 2000848)

ANU/SV/IR/AG/KRS

 


(Release ID: 2000956) Visitor Counter : 132


Read this release in: English , Kannada , Urdu , Hindi