வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட் அப் இந்தியா புத்தாக்க வாரக் கொண்டாட்டம்: திரு பியூஷ் கோயல் 40 யூனிகார்ன்களுடன் வட்டமேசை மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்

Posted On: 30 JAN 2024 9:28AM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஸ்டார்ட்அப் இந்தியா புத்தாக்க வாரக் கொண்டாட்டத்தின் போது, யூனிகார்ன்களின் வளர்ச்சிக்கான கூட்டு வழியை வகுக்கும் ஒரு யூனிகார்ன் வட்டமேசை மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். அதில் பங்கேற்ற 40 யூனிகார்ன்கள் தங்கள் அனுபவத்திலிருந்து கற்றல்கள், வளர்ச்சிக்கு உதவிய காரணிகள் மற்றும் இந்தியச் சூழல் அமைப்பின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான பகுதிகளை அடையாளம் கண்டனர். யூனிகார்ன்கள் ஒன்றிணைந்து யூனிகார்ன் கிளப் அல்லது சங்கத்தை அமைக்க வேண்டும் என்று திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார். இது நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மூலதனத்தை அணுகுவதற்கான தீர்வுகளைக் கொண்டு வரும்.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை, 2024 ஜனவரி 10 முதல் 18 வரை நாடு முழுவதும் உள்ள முக்கிய ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புத்தாக்க தொழில்முனைவோர் குறித்த பிற பங்குதாரர்கள் ஒன்றிணைந்ததைக் கொண்டாடியது.

மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக, 'வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான 5 தனிச்சிறப்பு இணையவழி கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தொழில்துறை தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகள் ஒரு தொடக்கத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகள் பற்றிய நுண்ணறிவுகளையும் முக்கியப் படிப்பினைகளையும் பகிர்ந்து கொண்டனர். இந்த அமர்வுகள் அனைத்தும் ஸ்டார்ட்அப் இந்தியா சமூக ஊடகங்களிலும்,  இளம் தொழில்முனைவோருக்கான மைபாரத் போர்ட்டலிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

ஸ்டார்ட்அப் இந்தியா புத்தாக்க வாரம், எண்ணற்ற ஆர்வமுள்ள நிறுவனர்களின் கனவுகளை ஊக்குவிப்பதாக அமைந்தன. பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிக்கும் பட்டறைகள் முதல் தொழில் காப்பகங்கள் வரை, அவர்களுக்கு வழிகாட்டின. பல நகரங்களில் பல சிந்தனையைத் தூண்டும் வட்டமேசை மாநாடுகள் பங்குதாரர் விவாதங்களுடன் நடத்தப்பட்டன. எதிர்கால ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைக்கும் கூட்டணிகளை உருவாக்கின.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2000471

***

ANU/SMB/PKV/RS/RR


(Release ID: 2000534) Visitor Counter : 96