பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண் ஊழியர் தனது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமையை வழங்கியுள்ளது - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

நீண்டகால சமூக-பொருளாதார தாக்கத்துடன் கூடிய ஒரு முன்னோடி முடிவில், பெண்களுக்கு சமமான உரிமைகளை வழங்குவதற்கான பிரதமர் மோடியின் கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நிறுவப்பட்ட விதியை அரசு திருத்தியுள்ளது

Posted On: 29 JAN 2024 5:00PM by PIB Chennai

மத்திய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. பெண் ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் மனைவிக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்க அனுமதிக்கிறது

மகளிருக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள விதியை அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்மூலம், பெண் பணியாளர் குடும்ப ஓய்வூதியத்திற்கு அவரது கணவருக்கு பதிலாக அவரது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்கும் உரிமையை வழங்கியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய இணையமைச்சர் (தனி பொறுப்பு) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை, மத்திய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை  வழங்க அனுமதிக்கிறது.

விவாகரத்து நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு இந்த திருத்தம் தீர்வு காணும் என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக, இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது, அதே நேரத்தில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மனைவியின் தகுதியின்மையைப் பொறுத்து  அல்லது அவரது மறைவுக்குப் பிறகு மட்டுமே தகுதி பெற்றனர். இருப்பினும், புதிய திருத்தம் பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணவருக்குப் பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோர அனுமதிக்கிறது.

இந்த நடவடிக்கையைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஆயுதப் படைகளில் பெண்களுக்கான நிரந்தர ஆணையம் அல்லது நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு திருத்தம் என ஒவ்வொரு துறையிலும் பெண் செயல்பாட்டாளர்களுக்கு சமமான, நியாயமான மற்றும் முறையான உரிமைகளை வழங்கும் பிரதமர் மோடியின் கொள்கைக்கு ஏற்ப இந்த திருத்தம் உள்ளது என்றார்.

அலுவலக குறிப்பாணையில், பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவருக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்க வேண்டும், அந்த கோரிக்கையின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் போது அவர் இறந்தால், அவரது தகுதிவாய்ந்த குழந்தை / குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் வழக்கு விசாரணையின் போது இறந்துவிட்டால், அதற்கேற்ப குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஒரு பெண் ஊழியர் தகுதியான குழந்தை இல்லாத விதவையாக உயிருடன் இருந்தால், குடும்ப ஓய்வூதியம் மனைவியை இழந்தவருக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மனைவியை இழந்தவர் சிறாரின் பாதுகாவலராக இருந்தால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் பாதுகாவலராக இருந்தால், மனைவியை இழந்தவர் பாதுகாவலராக இருக்கும் வரை குடும்ப ஓய்வூதியம் அவருக்கு வழங்கப்படும். குழந்தை உரிய வயதை அடைந்து, குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவுடன், அது அக்குழந்தைக்கு நேரடியாக வழங்கப்படும்.

பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் மறைந்த நிலையில் அவருக்கு கணவரும், வயது வந்த அதே நேரத்தில் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள குழந்தைகளும் இருந்தால், அத்தகைய குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அந்தக்  குழந்தைகள் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர்களாக மாறும் பட்சத்தில், மனைவியை இழந்தவருக்கு அவர் இறக்கும் வரையிலோ அல்லது மறுமணம் செய்து கொள்ளும் வரையிலோ இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

பணிபுரியும் பெண்களுக்கு உகந்த சூழலை வழங்குவதற்காக பிரதமர் மோடியின் கீழ் தொடர்ச்சியான நிர்வாக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் பொறுப்பாளரான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

------

(Releas ID: 2000373)

ANU/SM/IR/KPG/KRS


(Release ID: 2000441) Visitor Counter : 412


Read this release in: English , Urdu , Marathi , Hindi