பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத்துறைச் செயலாளர் 2024, ஜனவரி 30, 31 ஆம் தேதிகளில் ஓமனில் பயணம் மேற்கொள்கிறார்
Posted On:
29 JAN 2024 12:26PM by PIB Chennai
பாதுகாப்புச் செயலாளர் திரு கிரிதர் அரமானே, 2024 ஜனவரி 30, 31-ம் தேதிகளில் ஓமனில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ஓமன் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் முகமது பின் நசீர் பின் அலி அல்-ஜாபியுடன் 12-வது கூட்டு ராணுவ ஒத்துழைப்புக் குழுக் கூட்டத்திற்குத் திரு கிரிதர் அரமானே இணைத் தலைவராக இருப்பார்.
இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது, திரு கிரிதர் அரமானே, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதுடன் இருதரப்பு ஈடுபாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், தொழில்துறை ஒத்துழைப்பு போன்ற புதிய முயற்சிகளையும் ஆராயவுள்ளார். இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட ஆர்வமுள்ள பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள்.
இருதரப்புப் பயிற்சிகள், பணியாளர் பேச்சுவார்த்தைகள், பயிற்சி, புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகள் போன்ற ராணுவ ஒத்துழைப்பின் ஒவ்வொரு துறையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, உத்திசார்ந்த கூட்டாண்மையை இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தும்
இந்தியாவுக்கும், ஓமனுக்கும் வலுவான, பன்முக உறவு உள்ளது. இது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உத்திசார்ந்த அம்சங்களில் விரிவடைந்துள்ளது.
-----
(Release ID: 2000303)
ANU/SMB/IR/KPG/RR
(Release ID: 2000328)
Visitor Counter : 106