பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
புதுதில்லி, கடமைப் பாதையில் இந்தியாவின் 75 வது குடியரசு தின அணிவகுப்பைக் காண பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது
प्रविष्टि तिथि:
25 JAN 2024 2:36PM by PIB Chennai
இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தையொட்டி புதுதில்லியின் கடமைப் பாதையில் நடைபெறவுள்ள பிரமாண்டமான குடியரசு தின அணிவகுப்பைக் காண சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. அரசின் மக்கள் பங்களிப்பு தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, பஞ்சாயத்து பிரதிநிதிகள் தேசிய விழாவில் பங்கேற்க ஒரு வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். தேசிய கொண்டாட்டத்தில் பஞ்சாயத்து பிரதிநிதிகளை அங்கீகரித்து ஈடுபடுத்துவதன் மூலம் ஜனநாயக நெறிமுறைகளை வலுப்படுத்துவதால் இந்த முயற்சி மகத்தான முக்கியத்துவம் பெறுகிறது.
ஜனவரி 26 அன்று, சிறப்பு அழைப்பாளர்கள் புதுதில்லியின் கடமைப்பாதையில் குடியரசு தின அணிவகுப்பைக் காண்பார்கள். அணிவகுப்பைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள், புதுதில்லியில் உள்ள மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சரின், அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சி, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் திரு ஃபகன் சிங் குலஸ்தே, பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் திரு. கபில் மோரேஷ்வர் பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கிராமங்களின் நிர்வாகத்திற்கு அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புக்காக அவர்கள் கௌரவித்து பாராட்டுவார்கள்.
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணை உட்பட சுமார் 500 மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
------
ANU/AD/PKV/KPG/RR
(रिलीज़ आईडी: 1999596)
आगंतुक पटल : 136