பாதுகாப்பு அமைச்சகம்

குடியரசு தின அணிவகுப்பு 2024 -ல் மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்த உள்ளது

Posted On: 24 JAN 2024 12:22PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ)  உருவாக்கிய பல முக்கியமான அமைப்புகள் / தொழில்நுட்பங்களை 2024 ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் நடைபெறும் 75-வது குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும்.

தற்சார்பு இந்தியா திட்டங்களின்படி செயல்படும் அமைப்பு என்ற வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சியின் முக்கியப் பகுதிகளில் டிஆர்டிஓவின் பெண் விஞ்ஞானிகளின் மதிப்புமிக்கப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 'நிலம், காற்று, கடல், இணையவெளி, விண்வெளி ஆகிய 5 பரிமாணங்களிலும் பாதுகாப்புக் கேடயத்தை வழங்குவதன் மூலம் தேசத்தைப் பாதுகாப்பதில் மகளிர் சக்தி' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு டிஆர்டிஓ அணிவகுப்பு வாகனம்  உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் ஈடுபாடு இந்த அணிவகுப்பு வாகனத்தில் முக்கியமாக முன்னிலைப்படுத்தப்படும். தலைசிறந்த விஞ்ஞானி திருமதி சுனிதா தேவி ஜெனா இப்படைப்பிரிவின் தளபதியாக இருப்பார். மனிதர்களால் இயக்கப்படும் சிறிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணை, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் அக்னி-5, தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை, மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, குறுகிய தூர கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை,  'ஹெலினா' எனும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை, அஸ்த்ரா, இலகுரக போர் விமானம்- 'தேஜஸ்', மேம்பட்ட மின்னணுப் போர் அமைப்பு - 'சக்தி', சைபர் பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை கட்டுப்பாட்டு அமைப்புகள், செமி கண்டக்டர் ஃபேப்ரிகேஷன் வசதி உள்ளிட்டவை டிஆர்டிஓ அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற உள்ளன.

 

***

ANU/SMB/BS/RS/KRS



(Release ID: 1999139) Visitor Counter : 108


Read this release in: English , Urdu , Hindi , Telugu