மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 ஜனவரி 26 அன்று புதுதில்லியில் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான 250 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா கலந்துரையாட உள்ளார்

Posted On: 24 JAN 2024 3:09PM by PIB Chennai

புதுதில்லி கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு 2024-ஐக் காண்பதற்கு மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் தேசிய கோகுல் இயக்கத்தின் 250 பயனாளிகளுக்கும், அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இவர்கள், 2024 ஜனவரி 26 அன்று புதுதில்லி கடைமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்பைக் கண்டுகளிப்பார்கள். முன்னதாக, ஜனவரி 25 அன்று, புதுதில்லியில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் அழைப்பாளர்கள் பார்வையிடவுள்ளனர்.

 

மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா 2024, ஜனவரி 26 அன்று புதுதில்லியில் உள்ள சிறி ஃபோர்ட் கலையரங்கில் சிறப்பு அழைப்பாளர்களுடன் கலந்துரையாடவுள்ளார். மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர்கள் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், டாக்டர் எல்.முருகன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் துறை செயலாளர் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.

 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இன்று பயனாளிகள் தில்லி வருகின்றனர்.  அவர்களுக்குத் தங்கும் வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது, இந்த அழைப்பாளர்கள் 2024 குடியரசு தின அணிவகுப்பில் அரசின் சிறப்பு விருந்தினர்களாக கௌரவிக்கப்படுகின்றனர்.

 

கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, உள்நாட்டு மாட்டினங்களை அறிவியல் மற்றும் முழுமையான முறையில் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனித்தன்மையுடன் தேசிய கோகுல் இயக்கம் 2014 டிசம்பரில் தொடங்கப்பட்டது. அதிகரித்து வரும் பால் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நாட்டின் கிராமப்புற விவசாயிகள் பால் பண்ணைத் தொழிலில் லாபம் ஈட்டுவதற்கும், பால் உற்பத்தி மற்றும் மாடுகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

***

(Release ID: 1999090)

ANU/SMB/BS/RS/KRS


(Release ID: 1999126) Visitor Counter : 101