குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் விடுத்துள்ள செய்தி
प्रविष्टि तिथि:
22 JAN 2024 9:05AM by PIB Chennai
அயோத்தி ராமர் ஆலயப் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டுக் குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் விடுத்துள்ள செய்தி:-
“வரலாற்று சிறப்புமிக்க நகரமான அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை மேற்கொள்ளப்படும் இந்தச் சிறப்புமிக்க நாளில் வாழ்த்துகள்.
தேசிய கௌரவம் மீண்டும் விழிப்புற்றதைக் குறிக்கும் இந்தக் கொண்டாட்ட தருணத்தைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அயோத்தியில் குழந்தை ராமரின் பிரதிஷ்டையை வழிநடத்த 11 நாள் கடுமையான விரதங்களுக்குப் பிறகு புனித சடங்குகளை மேற்கொள்ளும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ஜனவரி 22 நமது நாகரிகத்தில் 'தெய்வீகத்தை’ வரையறுக்கும் தருணமாக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில், பிரபு ஸ்ரீ ராமரின் மதிப்புகளான கண்ணியம், மன்னிப்பு, துணிச்சல், பணிவு, இரக்கம் ஆகியவற்றை ஒரு வாழ்க்கை முறையாக வளர்த்துக் கொள்ள நாம் உறுதியேற்போம்.”
இவ்வாறு குடியரசு துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
***
ANU/SMB/PLM/AG/KV
(रिलीज़ आईडी: 1998566)
आगंतुक पटल : 174