எரிசக்தி அமைச்சகம்
ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் 2022-23-ம் நிதியாண்டிற்கான சிறந்த நிதி அறிக்கைக்காக ஐசிஏஐ விருதை வென்றது
Posted On:
18 JAN 2024 11:05AM by PIB Chennai
மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமும், மகாரத்னா பொதுத்துறை நிறுவனமுமான ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிதிச் சேவைத் துறையில் (வங்கி, காப்பீடு அல்லாத) 2022-23 நிதியாண்டிற்கான சிறந்த நிதி அறிக்கைக்காக இந்தியா பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் 'பிளேக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒரே விருது இதுவாகும். மேலும் நிறுவனத்தின் கணக்கியல் நடைமுறைகள், வெளிப்படுத்தல் கொள்கைகள், நிதி அறிக்கைகளை சமர்ப்பித்தல், ஆண்டு அறிக்கையில் உள்ள பிற தகவல்கள், இந்திய கணக்கியல் தரநிலைகள், சட்டரீதியான வழிகாட்டுதல்கள், ஒழுங்குமுறைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாயிடமிருந்து ஆர்இசி நிறுவன இயக்குநர் (நிதி) திரு அஜய் சௌத்ரி, செயல் இயக்குநர் (நிதி) திரு சஞ்சய் குமார், துறைத் தலைவர் (நிதி) திரு ஜதின் குமார் நாயக் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனர்.
***
ANU/PKV/IR/AG/KV
(Release ID: 1997203)
Visitor Counter : 91