எரிசக்தி அமைச்சகம்

செஷயர் ஹோம் இந்தியா, தில்லி பிரிவில் உள்ள உடல், மனநலம் குன்றியவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆதரவை தேசிய புனல் மின்கழகம் வழங்குகிறது

Posted On: 18 JAN 2024 11:03AM by PIB Chennai

செஷயர் ஹோம் இந்தியா தில்லி பிரிவில் வசிக்கும் உடல், மனநலம் குன்றியோருக்கு மருத்துவ பராமரிப்பு,  ஊட்டச்சத்து ஆதரவு வழங்குவதற்காக தேசிய நீர் புனல் கழகம், செஷயர் ஹோம் இந்தியா, தில்லி பிரிவு இடையே பெரு நிறுவன சமூக பொறுப்பின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதன் மூலம் செஷயர் ஹோம் இந்தியா, தில்லி பிரிவில் வசிப்பவர்களுக்கு ஓராண்டுக்கு மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து உதவிகளை தேசிய புனல் மின் கழகம் வழங்கும். மேலும், குடியிருப்பாளர்களின் பராமரிப்புக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்.

ஃபரிதாபாத்தில் 2024 ஜனவரி 17 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நீர்மின் கழகத்தின் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான பொது மேலாளர் மற்றும் செஷயர் ஹோம் இந்தியாவின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜய் கிருஷ்ணா ஆகியோர் என்எச்பிசி-யின் இயக்குநர் மற்றும் செயல் இயக்குநர் உத்தம் லால் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

***

ANU/PKV/IR/AG



(Release ID: 1997186) Visitor Counter : 39


Read this release in: English , Urdu , Hindi , Telugu