அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறையில் தேசிய அறிவியல் விருது 2024-க்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
14 JAN 2024 10:54AM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறையில் "தேசிய அறிவியல் விருதினை" மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு பங்களிப்புகளை தேசிய விருது அங்கீகரிக்கிறது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்குப் பல்வேறு துறைகளில் தனிநபர்கள் அல்லது குழுக்களிடமிருந்து தேசிய அறிவியல் விருதுக்குப் பரிந்துரைகள் / விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுகள் பின்வரும் நான்கு பிரிவுகளில் வழங்கப்படும்:
விஞ்ஞான் ரத்னா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வாழ்நாள் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் அதிகபட்சம் மூன்று விருதுகள் வழங்கப்படும்.
விஞ்ஞான் ஸ்ரீ, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்க அதிகபட்சம் 25 விருதுகள் வழங்கப்படும்.
விஞ்ஞான் யுவா, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இளம் விஞ்ஞானிகளை அங்கீகரித்து ஊக்குவிக்க அதிகபட்சம் 25 விருதுகள் வழங்கப்படும்.
விஞ்ஞான் குழு விருது: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு குழுவில் பணியாற்றி அசாதாரண பங்களிப்பை வழங்கிய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் / ஆராய்ச்சியாளர்கள் / கண்டுபிடிப்பாளர்கள் அடங்கிய குழுவுக்கு அதிகபட்சம் மூன்று விருதுகள் வழங்கப்படலாம்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல், புவி அறிவியல், மருத்துவம், பொறியியல் அறிவியல், வேளாண் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு, அணுசக்தி, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 13 துறைகளில் தேசிய அறிவியல் விருது வழங்கப்படும்.
இந்த விருதுகளுக்கான பரிந்துரைகள்2024 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 28வரை உள்துறை அமைச்சகத்தின் (https://awards.gov.in/) விருது போர்ட்டலில் வரவேற்கப்படுகின்றன.இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) ஒருங்கிணைக்கிறது.
இந்த விருதுகள் 2024 மே 11ஆம் தேதி(தேசிய தொழில்நுட்ப தினம்) அறிவிக்கப்படும். அனைத்து வகை விருதுகளுக்கான விருது வழங்கும் விழா2024 ஆகஸ்ட் 23ஆம் தேதி(தேசிய விண்வெளி தினம்) நடைபெறும்.
*****
ANU/PKV/SMB/DL
(Release ID: 1996043)
Visitor Counter : 256