வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா-அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான 14 வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 13 JAN 2024 9:21AM by PIB Chennai

இந்தியா - அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் அளவிலான 14 வது கூட்டம் (டிபிஎஃப் ) 2024 ஜனவரி 12, அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் கேத்ரின் டாய் ஆகியோர் டிபிஎஃப் கூட்டத்திற்கு இணைத் தலைமை வகித்தனர்.

பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி தூதர் கேத்ரின் டாய் உடன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு சிறிய குழு கூட்டத்தையும் நடத்தியது.

இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துவதிலும், நாடுகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த பொருளாதார கூட்டாண்மையை உயர்த்துவதிலும் டிபிஎஃப்- ஐ திறம்பட செயல்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். கூட்டத்திற்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

14வதுஇந்தியா - அமெரிக்கா டிபிஎஃப் விவாதங்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

முக்கியமான கனிமங்கள், சுங்கம் மற்றும் வர்த்தக வசதி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் உயர் தொழில்நுட்பதயாரிப்புகளில் வர்த்தகம் உள்ளிட்ட சில துறைகளில் எதிர்கால கூட்டு முன்முயற்சிகளைத் தொடங்குவதற்கான அடித்தளத்தைத் தொடர அமைச்சர்கள் உறுதிபூண்டனர்.

 

 

இதில் அமெரிக்காவும் இந்தியாவும் பொருளாதார ரீதியாக அர்த்தமுள்ள சாத்தியங்களை மேற்கொள்வதற்காக மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான லட்சிய மற்றும் தொலைநோக்கு செயல்திட்டத்தை உருவாக்கும்.

சர்வதேச ஆய்வகங்களின் முடிவுகளை பரஸ்பரம் அங்கீகரிப்பதைத் தொடரவும், சாத்தியமான போதெல்லாம் இருதரப்பு அடிப்படையில் பரஸ்பர அங்கீகார ஏற்பாடுகளை நிறுவவும் சுங்கவரி அல்லாத தடைகளைத் தணிக்க ஒரு கூட்டு வசதி முறையை நிறுவ அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

கேத்தரின் டாய் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தையும், ஜி 20 வர்த்தக மற்றும் முதலீட்டு பணிக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அம்சங்களையும் பாராட்டினார்.

 குறிப்பாக வர்த்தக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான உயர் மட்டக் கொள்கைகளை அவர் ஏற்றுக்கொண்டார். ஜி 20 முடிவுகளை இருதரப்பு ரீதியாக முன்னெடுப்பதன் மூலம் இந்தக் கொள்கைகளை மற்ற மன்றங்களில் செயல்படுத்துவதற்கான ஆதரவை மேலும் தொடர அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

சமூக பாதுகாப்பு முழுமைப்படுத்தல் ஒப்பந்தம் குறித்து நடந்து வரும் விவாதங்களின் ஒரு பகுதியாக அமெரிக்கத் தரப்பிற்கு இந்தியத் தரப்பில் கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

எதிர்கால ஒப்பந்தத்திற்கான ஈடுபாட்டை விரைவுபடுத்துவதையும் அவர்கள் ஊக்குவித்தனர்.சமூக பாதுகாப்பு / மொத்தமயமாக்கல் ஒப்பந்தம் என்பது டி.பி.எஃப் இல் இந்தியத் தரப்பிலிருந்து வரும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும், இது நாடுகளுக்கு இடையிலான சேவை வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரியும் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவுவதற்கும் கணிசமாக பங்களிக்கும்.

*****

ANU/PKV/BS/DL(Release ID: 1995851) Visitor Counter : 88