வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
'இந்திய வர்த்தக அடையாளத்தை’ ஊக்குவிக்க ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் 50 பொருட்களைப் பட்டியலிட்டு சாதனைப் படைத்துள்ளது
Posted On:
11 JAN 2024 5:37PM by PIB Chennai
வர்த்தகம் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் வெற்றிகரமாக 50-க்கும் மேற்பட்ட பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் 25-க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 160-க்கும் அதிகமான மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சி நுகர்வோருக்கு அவர்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளில் உள்ள பொருட்களின் தோற்றம் குறித்து எடுத்துரைப்பதையும், ஒரு தனித்துவமான அடையாளத்தை நிறுவுவதையும், விழிப்புணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
லடாக்கின் லேவில் உள்ள பஷ்மினா என்ற நெசவாளர் பெண், மேற்கு திரிபுராவில் உள்ள திறமையான மூங்கில் கைவினைஞர்களை கௌரவிப்பதில் இருந்து, குஜராத்தின் கட்ச்சின் அஜ்ராக் குழுமங்களையும், கேரளாவின் வயநாட்டில் அர்ப்பணிக்கப்பட்ட காபி தோட்டக்காரர்களையும் அரவணைப்பது வரை - ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் ஊக்குவிப்பு நடவடிக்கையாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியின் 107-வது அத்தியாயத்தில், ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு பட்டியலில் லடாக்கின் முயற்சிகளை பாராட்டினார்.
----
(Release ID: 1995257)
ANU/AD/IR/KPG/KRS
(Release ID: 1995302)
Visitor Counter : 141