உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அயோத்தியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Posted On:
11 JAN 2024 2:16PM by PIB Chennai
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, எஃகு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா இன்று புதுதில்லியிலிருந்து அயோத்தி மற்றும் அகமதாபாத்துக்கு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம், அகமதாபாத்திலிருந்து அயோத்திக்கு வாரத்திற்கு மூன்று நேரடி விமானங்கள் இயக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜெய்வீர் சிங், அயோத்தி மக்களவை உறுப்பினர் திரு லல்லு சிங், அகமதாபாத் மக்களவை உறுப்பினர் டாக்டர் கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இண்டிகோ இந்த வழித்தடத்தில் விமானத்தை இயக்குகிறது. மேலும் இந்த விமானம் அகமதாபாத் - அயோத்தி - அகமதாபாத் (வாரத்திற்கு மூன்று முறை) இடையே 2024 ஜனவரி 11 முதல் நடைமுறைக்கு வரும்:
இந் நிகழ்ச்சியில் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, "அயோத்தி- அகமதாபாத் நேரடி விமான சேவை இரு நகரங்களுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை மேலும் ஊக்குவிக்கும்’’ என்று கூறினார். இந்த இரண்டு நகரங்களும் உண்மையான அர்த்தத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் மத்திய அமைச்சர் கூறினார். ஒருபுறம், அகமதாபாத் இந்தியாவின் பொருளாதார வலிமையின் அடையாளம் என்றும், மறுபுறம், அயோத்தி இந்தியாவின் ஆன்மீக, நாகரிக வலிமையைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். இரு நகரங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து, சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
----
ANU/PKV/IR/KPG/KV
(Release ID: 1995144)
Visitor Counter : 152