மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர், 2024 ஜனவரி 7 முதல் 9-ம் தேதி வரை ஒடிசாவில் சாகர் பரிக்ரமா எனப்படும் கடலோரப் பயணத்தின் 11வது கட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர்

Posted On: 06 JAN 2024 1:35PM by PIB Chennai

2024 ஜனவரி 7 முதல் 9ம் தேதி வரை ஒடிசாவின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாகர் பரிக்ரமா எனப்படும் கடலோரப் பயணத்தின் 11 வது கட்ட நிகழ்வில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலாஇணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். கிசான் கடன் அட்டைப் (கே.சி.சி) பயனாளிகளான முன்னோடி மீனவர்கள், மீன் வளர்ப்பவர்கள், இளம் மீன்வள தொழில்முனைவோர் போன்றவர்களை மத்திய அமைச்சர்கள் இந்த நிகழ்வின் போது சந்தித்துக் கலந்துரையாடுகின்றனர். பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா (பி.எம்.எம்.எஸ்.ஒய்) திட்டம், கடன் அட்டைத் திட்டம் மற்றும் பிற திட்டங்களின் நன்மைகள் மீனவர்களுக்கு பரவலாக பரப்பப்படும்.

சாகர் பரிக்ரமாவின் 11வது கட்டம் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ராக், பாலசோர் மாவட்டத்தை உள்ளடக்கியதாகும். மத்திய அரசின் மீன்வளத்துறை, ஒடிசா அரசு, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், இந்திய கடலோரக் காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு அமைப்பு, மீனவர் சங்கத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

சாகர் பரிக்ரமா பயணத்தில் மீனவர்கள், மீன் வளர்ப்போர் மற்றும் பிற தொடர்புடைய பிரிவினருடன் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறும்.

ஒடிசா மாநிலம் 480 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டது. 33 கடல் உணவு பதப்படுத்தும் ஆலைகள்3 மீன் மற்றும் இறால் தீவன ஆலைகளுடன் பன்முகப்படுத்தப்பட்ட நீர் வளங்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது.

"சாகர் பரிக்ரமாவின்" முதல் கட்டப் பயணம் மார்ச் 5,2022 அன்று குஜராத்தின் மாண்ட்வியில் இருந்து தொடங்கியது, இதுவரை, சாகர் பரிக்ரமா மொத்தம் பத்து கட்டங்கள் நடைபெற்றுள்ளன.  கடலோர மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களான குஜராத், டாமன் - டையூ, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, அந்தமான் & நிக்கோபார், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இதுவரை இந்த சாகர் பரிக்ரமா நடைபெற்றுள்ளது.

----

ANU/PKV/PLM/DL



(Release ID: 1993753) Visitor Counter : 109