பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தின விழா: வீரக் கதை 3-வது பதிப்பில் நாடு முழுவதிலுமிருந்து 1.37 கோடி மாணவர்கள் பங்கேற்பு ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பை சிறப்பு விருந்தினர்களாக காண 100 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
Posted On:
05 JAN 2024 6:01PM by PIB Chennai
குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் கூட்டு முயற்சியான 'வீரக் கதை' திட்டத்தின் மூன்றாவது பதிப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், 2.43 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த, 1.37 கோடி மாணவர்கள் பங்கேற்றனர்; தேசிய அளவில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தலா 25 பேர் என 100 பேர் கொண்ட பட்டியல், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை & 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளிட்ட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
100 வெற்றியாளர்கள் பட்டியல் (வகை: 3 முதல் 5 வரை) – வீரக் கதை 3-வது பதிப்பு
2023, ஜூலை 13, அன்று தொடங்கப்பட்ட, வீரக் கதை 3-வது பதிப்பில் கட்டுரை மற்றும் பத்தி எழுதுவதற்கான சிந்தனையைத் தூண்டும் தலைப்புகளை அறிமுகப்படுத்தியது. மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த முன்னுதாரண நபர்கள் குறித்து, குறிப்பாக வீரதீர விருது பெற்றவர்களை மையமாகக் கொண்ட கருப்பொருள்களில் எழுதுவதற்கான விருப்பம் வழங்கப்பட்டது. மேலும், ராணி லக்ஷ்மிபாய் போன்ற தங்களுக்கு உத்வேகம் அளித்த எந்தவொரு சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கைக் கதைகளையும் எழுதுவதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகளில் 1857-ஆம் ஆண்டு முதலாவது சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி மக்களின் எழுச்சியின் குறிப்பிடத்தக்க பங்கு ஆகியவையும் அடங்கும்.
இந்த மாறுபட்ட தலைப்புகளின் தொகுப்பு வீரக் கதை 3-வது பதிப்பின் உள்ளடக்கத்தை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களிடையே வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் குறித்த ஆழமான புரிதலை முன்னெடுத்தது.
இந்தத் திட்டத்தின் செயலாக்கத்தில் பள்ளிகள் தங்கள் மட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உள்ளடக்கியது. நேரடி மற்றும் ஆன்லைன் முறைகளில் பல்வேறு பள்ளிகளில் வீரதீர விருது பெற்றவர்களின் நாடு தழுவிய கலந்துரையாடல் நிகழ்வுகள் மற்றும் MyGov இணையதளத்தில் சிறந்த உள்ளீடுகளை சமர்ப்பித்தல். வீரக் கதை 3-வது பதிப்புக்கான பள்ளி அளவிலான நடவடிக்கைகள் 2023, செப்டம்பர் 30 அன்று நிறைவடைந்தன.
மாவட்ட மற்றும் மாநில அளவில் தொடர் மதிப்பீடுகளுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 3,900 படைப்புகள் தேசிய அளவிலான மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டன. கல்வி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட 100 சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்தது. வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழா பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் இணைந்து புதுதில்லியில் நடத்தும். வெற்றி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ .10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும், மேலும் சிறப்பு விருந்தினர்களாக கடமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்பு 2024 ஐக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
தேசிய அளவில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களைத் தவிர, மாநில / யூனியன் பிரதேச அளவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இருவர் வீதம் எட்டு வெற்றியாளர்கள் மற்றும் மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இருவர் வீதம் நான்கு வெற்றியாளர்கள் மாநில / யூனியன் பிரதேச / மாவட்ட அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.
----
(Release ID: 1993582)
ANU/AD/BS/KPG/KRS
(Release ID: 1993629)
Visitor Counter : 161