புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய சூரிய சக்திக் கழகம் தற்சார்பு இந்தியா திருவிழா 2024 -ல் பங்கேற்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
04 JAN 2024 3:21PM by PIB Chennai
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மினிரத்னா வகை-1 மத்திய பொதுத்துறை பிரிவான இந்திய சூரிய சக்திக் கழகம் ஜனவரி 3 முதல் 10 வரை இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு, தொழில், உள்நாட்டு வர்த்தக, தொழில் மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ள தற்சார்பு இந்தியா திருவிழா 2024-ல் பங்கேற்கிறது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உள்நாட்டு வர்த்தக, தொழில் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் படைப்புகள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தற்சார்பு இந்தியா திருவிழா 2024-ஐ வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆகியோர் 2024 ஜனவரி 3 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தனர்.
***
(Release ID: 1993037)
ANU/SMB/IR/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1993175)
வருகையாளர் எண்ணிக்கை : 173