பிரதமர் அலுவலகம்

உல்ஃபாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளர்

Posted On: 29 DEC 2023 10:15PM by PIB Chennai

உல்ஃபாவுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, அசாமில் நீடித்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தனது சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில், அசாம் மாநிலத்தில் உள்ள உல்பாவின் பழமையான கிளர்ச்சிக் குழுவுடன் மத்திய அரசும், அசாம் அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார். வன்முறைப் பாதையைக் கைவிட்டு, அனைத்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஒப்படைக்கவும், சட்டத்தால் நிறுவப்பட்ட அமைதியான ஜனநாயக செயல்முறையில் சேரவும், நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் கிளர்ச்சிக் குழு ஒப்புக் கொண்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமூக ஊடக எக்ஸ் பதிவுக்கு பிரதமர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

"அமைதி மற்றும் வளர்ச்சியை நோக்கிய அசாமின் பயணத்தில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், அசாமில் நீடித்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த வரலாற்றுச் சாதனையில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் செழிப்பின் எதிர்காலத்தை நோக்கி நகர்கிறோம்.

***

(Release ID: 1991653)

ANU/PKV/BS/AG/KRS



(Release ID: 1992523) Visitor Counter : 70