நிதி அமைச்சகம்
2023-ல் நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறை செயல்பாடுகள்
Posted On:
27 DEC 2023 3:21PM by PIB Chennai
இழப்பு மதிப்பீடு, வாராக்கடன் நிர்வாகம், அனைவரையும் உள்ளடக்கிய நிதி, வாடிக்கையாளர் சேவை, டிஜிட்டல் மாற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதுடன் விரிவுபடுத்தப்பட்ட அணுகல் மற்றும் சிறந்த சேவை என்ற சீர்திருத்த நடவடிக்கை போன்ற முன் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு நிதிச்சேவைகள் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
வணிக வங்கிகளில் வாராக்கடன்களை குறைப்பதில் இந்தத்துறை குறிப்பிடத்தக்க தலையீட்டை செய்துள்ளது. 2019 மார்ச் மாதத்தில் ரூ.9,33,779 கோடியாக இருந்த மொத்த வாராக்கடன் அளவு 2023 மார்ச் மாதத்தில் ரூ.5,71,515 கோடி அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம் போன்ற நடவடிக்கைகள் இதற்கு பயன்பட்டுள்ளன.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வலுவான சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக டிஜிதன் இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 2017-18 நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 2022-23 நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு பீம்-யூபிஐ மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளது. அதாவது 2023 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதன் மூலம் சாதனை அளவாக 1000 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
பிரதமரின் மக்கள் நிதித் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம், முத்ரா கடன் திட்டம், ஸ்டார்ட்அப் இந்தியா, அடல் ஓய்வூதியத் திட்டம் போன்றவை அனைவரையும் உள்ளடக்கிய நிதிக்கான முன் முயற்சிகளாகும். நிதிச்சேவைகள் துறையின் முன்முயற்சியால் லட்சக்கணக்கான குடிமக்கள், குறிப்பாக நலிந்த பிரிவினர், அடிப்படை வங்கிச்சேவைகள், காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் போன்றவற்றில் இணைவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு 2014-15 நிதியாண்டில் ரூ.8.45 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்ட நிலையில், 2022-23 நிதியாண்டில் ரூ.21.55 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 7.36 கோடி விவசாய கடன் அட்டைகள் செயல்பாட்டில் இருப்பதை அடுத்து இந்தத் திட்டத்தின் பயன் விவசாயிகளுக்கு உரிய நேரத்திலும், இடையூறு இல்லாமலும் கிடைக்கிறது.
கடன் வசூல் தீர்ப்பாயத்தின் பணம் சார்ந்த வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டதால் இதன் மூலம் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.72,708 கோடி கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 2022-23 நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்தது. நடப்பு நிதியாண்டில், 2023-24-ல் 15.10.2023 வரை 8,513 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. 2020 ஏப்ரல் முதல் 2023 செப்டம்பர் வரையிலான மூன்றாண்டு காலத்தில் யூபிஐ மூலமான பரிவர்த்தனைகள் மாதத்திற்கு ஒரு பில்லியன் என்பதிலிருந்து 10 பில்லியன் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
2023 அக்டோபர் 04 நிலவரப்படி பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் 50.63 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் வைப்புத் தொகை அளவு ரூ.2,05,190 கோடியாக உள்ளது. பெண் பயனாளிகளின் எண்ணிக்கை 28.10 கோடியாக அதாவது, 55.5 சதவீதமாக உள்ளது. அதேபோல் ஊரக மற்றும் சிறு நகரப் பயனாளிகளின் எண்ணிக்க 33.81 கோடியாக அதாவது, 66.8 சதவீதமாக உள்ளது. இந்த கணக்கு வைத்திருப்போருக்கு 34.36 கோடி ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
2015 ஏப்ரல் 08 அன்று தொடங்கப்பட்ட முத்ரா திட்டத்தின் கீழ் 2023 அக்டோபர் 06 நிலவரப்படி ரூ.25.51 லட்சம் கோடி மதிப்புக்கு 43.74 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
2014-15 நிதியாண்டில் ரூ. 8.45 லட்சம் கோடியாக இருந்த வேளாண் கடன் விநியோகம், 2022-23 நிதியாண்டில் ரூ.21.55 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
2022-23 நிதியாண்டுக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி வளர்ப்பு, மீன்வளம் ஆகிய துறைகளுக்கு ரூ.1,26,000 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2023-24 நிதியாண்டில் வேளாண் கடன் இலக்கு ரூ.20.00 லட்சம் கோடியாகும்.
வேளாண் கடன் நிலவரம்- 2014-15 முதல் 2023-24 வரை
(ரூ கோடியில்)
|
ஆண்டு
|
ஆண்டு இலக்கு
|
சாதனை
|
சாதனை %
|
2014-15
|
8,00,000
|
8,45,328
|
106
|
2015-16
|
8,50,000
|
9,15,510
|
108
|
2016-17
|
9,00,000
|
10,65,756
|
118
|
2017-18
|
10,00,000
|
11,62,617
|
116
|
2018-19
|
11,00,000
|
12,56,830
|
114
|
2019-20
|
13,50,000
|
13,92,729
|
103
|
2020-21
|
15,00,000
|
15,75,398
|
105
|
2021-22
|
16,50,000
|
18,63,363
|
113
|
2022-23
|
18,50,000
|
21,55,163
|
116
|
2023-24
|
20,00,000
|
10,40,931*
|
52
|
* 2023-24-நிதியாண்டுக்கான தரவு, 2023 ஆகஸ்ட் 31 நிலவரப்படியானது
2023 ஜூன் 30 நிலவரப்படி மொத்த வேளாண் கடன் அட்டை கணக்குகளின் எண்ணிக்கை 7.36 கோடியாக இருந்தது. இதற்கான கடன் தொகை ரூ.8.86 லட்சம் கோடியாகும்.
***
(Release ID: 1990752)
PKV/SMB/AG/KRS
(Release ID: 1992222)
Visitor Counter : 181