பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின்போது அரசுத் திட்டங்களின் பயன்களை 100 சதவீதம் எட்டும் நிலையில் உதம்பூர் பகுதி உள்ளது

மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உதம்பூர் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்

Posted On: 31 DEC 2023 7:24PM by PIB Chennai

உதம்பூர் மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் .யாத்திரையின்போது மத்திய அரசின் அனைத்து முதன்மை திட்டங்களின் பயன்களும் மக்களை 100 சதவீதம் சென்றடையும் நிலை நெருங்கி வருகிறது.

                    

உதம்பூரில் இன்று (31-12-2023) மாவட்ட அதிகாரிகள் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடனான மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகர்ப்புறத் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர் சுருக்கமாக ஆய்வு செய்தார்.

 

மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடனான கூட்டத்தில், முக்கியமான திட்டங்கள் குறித்து அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு சாலைகள் மற்றும் இதர வளர்ச்சித் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள் அமைச்சரிடம் விளக்கினர்.

 

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் துார்வாருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்தும் மத்திய இணை  அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆலோசனை நடத்தினார்.

 

Release ID: 1991991

*** 

 SM/PLM/KRS

           


(Release ID: 1992004) Visitor Counter : 104