நிதி அமைச்சகம்
2023-ஆம் ஆண்டில் பொருளாதார விவகாரங்கள் துறையின் முக்கிய செயல்பாடுகள் ஒரு கண்ணோட்டம்
Posted On:
27 DEC 2023 3:07PM by PIB Chennai
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. 7.6 சதவீதமாக இருந்த நாட்டின் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி, அப்போது உலகிலேயே மிக உயர்ந்ததாக இருந்தது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது.
இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த, பருண்மை நிலையில் வளர்ச்சியில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. நுண்ணிய நிலையில் அனைவரையும் உள்ளடக்கிய நலன், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதிநுட்பம், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி, எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை நடவடிக்கை மற்றும் முதலீடு மற்றும் வளர்ச்சியின் நல்ல சுழற்சியை சார்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், தனியார் துறையிலிருந்து முதலீட்டை ஈர்ப்பதற்கும், கடந்த மூன்று ஆண்டுகளில் மூலதன முதலீட்டு ஒதுக்கீட்டை கணிசமாக அதிகரிப்பதற்கும் மூலதன செலவீனத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. மத்திய அரசின் மூலதனச் செலவு 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.15 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இத்தகைய சாதனைகளுக்கு உந்துதலாக, பல துணிச்சலான மற்றும் முக்கியமான சமூக-பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு அயராது பாடுபட்டு வருகிறது. ஒட்டு மொத்த வளர்ச்சி செயல்பாட்டில் விளிம்புநிலை மற்றும் இதுவரை சமூக-பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரை உள்ளடக்கிய மனப்பான்மையுடன் மத்திய அரசு தனது சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உலக வங்கி மற்றும் சர்வதேசசெலாவணி நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகள் இந்தியாவை உலகின் வேகமாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரமாக (ஈ.எம்.இ) அங்கீகரித்து, தொடர்ந்து காணும் இந்தியாவின் நெகிழ்வான மற்றும் நிலையான வளர்ச்சியை பாராட்டும்போது அரசின் கொள்கைகளின் வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை இந்தியா ஜி 20 மாநாட்டை நடத்தியதால் 2023-ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. செப்டம்பர் 2023-ல் புதுதில்லியில் நடந்த நிறைவு உச்சிமாநாட்டில் 43 தூதுக்குழுக்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜி 20 நிலையான நிதி தொழில்நுட்ப உதவி செயல் திட்டம் (டி.ஏ.பி) போன்ற முன்முயற்சிகள் நிலையான நிதியில், குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
உள்கட்டமைப்பு துணைத் துறைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட பெரும் பட்டியல் (ஹெச் .எம்.எல்), தேசிய உள்கட்டமைப்பு திட்டம் (என்.ஐ.பி), முக்கிய விநியோகங்களில் ஜி 20 உள்கட்டமைப்பு பணிக்குழுவின் ஒருமித்த கருத்து போன்ற முன்முயற்சிகள் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடு ஊக்கம் பெற்றது. பொதுத் துறை -தனியார்துறை கூட்டாண்மையை (பி.பி.பி) ஊக்குவிப்பதற்கான டி.இ.ஏ.வின் உத்தி சார்ந்த நடவடிக்கைகளில் வி.ஜி.எஃப் திட்டத்தின் விரிவாக்கம், உள்கட்டமைப்பு முதலீட்டு திட்ட மேம்பாட்டு நிதி (ஐ.ஐ.பி.டி.எஃப்) மறுசீரமைப்பு ஆகியவை அடங்கும்.
ஜி 20 இந்திய தலைமைத்துவ வேண்டுகோளின் பேரில், சர்வதேச நிதியம் மற்றும் எஃப்.எஸ்.பி ஒரு தொகுப்பு அறிக்கையை உருவாக்கியுள்ளன, இது ஜி 20 புதுதில்லி தலைவர்கள் பிரகடனத்தில் தலைவர்களால் வரவேற்கப்பட்டது. கிரிப்டோ-சொத்து நடவடிக்கைகள் மற்றும் சந்தைகளால் ஏற்படும் பருண்மைப் பொருளாதார மற்றும் நிதி நிலைத்தன்மை அபாயங்களை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உதவ கூட்டுப் பரிந்துரைகள் விரிவான வழிகாட்டலை வழங்குகின்றன.
சுருக்கமாக, 2023-ஆம் ஆண்டில் பொருளாதார விவகாரங்கள் துறை ஒரு சுறுசுறுப்பான மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை நிரூபித்துள்ளது, இது நிலையான நிதி, காலநிலை நடவடிக்கை, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தேசிய மற்றும் சர்வதேச முனைகளில் நிதித் துறை சீர்திருத்தங்களுக்கு கணிசமாக பங்களித்து வருகிறது.
******
(Release ID: 1990745)
SMB/BR/KRS
(Release ID: 1991895)
Visitor Counter : 169