புவி அறிவியல் அமைச்சகம்

இந்தியா தனது அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை விரைவில் அறிமுகம் செய்து, அடுத்த மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டைத் தொடங்கும் என்று திரு கிரண் ரிஜிஜு கூறினார்

Posted On: 26 DEC 2023 7:09PM by PIB Chennai

வானிலை முன்னறிவிப்பு, பருவநிலை ஆய்வுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய  புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அதற்கான இலச்சினையை   வெளியிட்டார்.

"புவி அறிவியல் துறை ஏற்கனவே ஒரு குறுகிய கால திட்டத்தைக் கொண்டுள்ளது, இப்போது 2047-ம் ஆண்டில்  இந்திய தற்சார்பு திட்டத்தை உருவாக்க அமிர்த காலத்துக்கான திட்டத்தை வகுத்து வருகிறது," என்று அவர் கூறினார்.

இந்த மாதம் துபாயில் நடைபெற்ற உலக பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாடு, சிஓபி 28 இல் உரையாற்ற அழைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவர்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் ஒருவர் என்று திரு. ரிஜிஜு கூறினார், இது பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதில் இந்தியாவின் தலைமைப் பங்கை உலக சமூகம் உணர்ந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது.

"உலகளாவிய தூய்மையான எரிசக்தியின் துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' (லைஃப்) ஒரு உலகளாவிய இயக்கமாக மாற்றுவதற்கான யோசனையை பிரதமர் திரு மோடி வெளிப்படுத்தியுள்ளார்" என்று அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், அதன் ஆண்டு கொண்டாட்டங்களின் போது பள்ளி மாணவர்களை அணிதிரட்டுமாறு திரு ரிஜிஜு இந்திய வானிலை ஆய்வு மையத்தை கேட்டுக் கொண்டார்.

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவை உலகளாவிய கவலைகள் என்றும் மாசுபாடு, அதிகனமழை மற்றும் கன மழை போன்ற தீவிர வானிலையின் உடனடி நிகழ்வு பூமியில் பரந்த பருவநிலை மாற்றத்தின் விளைவாக இருப்பதால், அனைத்து நபர்களும் ஒன்றிணைய வேண்டும் என்ற விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும், "என்று அவர் கூறினார்.

***

ANU/SM/IR/AG/KRS



(Release ID: 1990589) Visitor Counter : 96


Read this release in: English , Urdu , Hindi , Marathi