பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அரசு திட்டங்கள் 100 சதவீதம் சென்றடைவதை உறுதி செய்யவும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சம் தகவல், கல்வி மற்றும் தொடர்பு வாகனப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது

Posted On: 25 DEC 2023 4:10PM by PIB Chennai

நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் உள்ள அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களுக்கு அரசுத் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் இன்று முதல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடிக் குழுக்கள் மேம்பாட்டுக்கான பிரதமரின் திட்டம் (பிஎம்-ஜன்மன்) குறித்து தகவல், கல்வி மற்றும் தொடர்பு (..சி) வாகனப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் இருந்து பழங்குடியினர் கெளரவ தினத்தில் (நவம்பர் 15, 2023) பிரதமர் திரு நரேந்திர மோடி ஜன்மன் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள சுமார் 500 வட்டாரங்கள் மற்றும் 15,000 பழங்குடியினப்  பகுதிகளை உள்ளடக்கிய விரிவான தகவல் தொடர்பு பிரச்சாரம் தொடக்கத்தில் 100 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, மீதமுள்ள மாவட்டங்களில் இது நடைபெறும்

அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குடும்பங்களுக்கு தனிப்பட்ட உரிமைகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாக இந்த பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

2023-24 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை 9 முக்கிய அமைச்சகங்கள் துறைகள் இணைந்து 11 முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையில் பிரதமரின் ஜன்மன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

ஆயுஷ்மான் அட்டை, பிரதமரின் விவசாயிகளுக்கான கெளரவ நிதி உதவித் திட்டம், கிசான் கடன் அட்டை, தனிநபர் மற்றும் சமூக வன உரிமைகளின் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்றவை இந்த இயக்கத்தில் மேற்கொள்ளப்படும்டிசம்பர் 15, 2023 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கலந்துரையாடலின்போது இந்த இயக்கத்தின் செயலாக்கத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது, இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது 9 அமைச்சகங்கள் / துறைகள் ஒரு விரிவான செயல் திட்டத்தை தயாரித்தன. மாநிலங்களின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் இந்தத் திட்டம், அந்தந்த அமைச்சகங்களின் கேபினட் அமைச்சர்களின் கீழ் உள்ள உயர் அதிகாரக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வுப் பிரச்சார நடவடிக்கைகள்:

டிசம்பர் 25, 2023 முதல் நாடு தழுவிய தகவல் தொடர்பு பிரச்சாரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதுஇந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்குத் திட்டப் பயன்களை முழுமையாக வழங்குதலுக்கான முகாம்கள் மற்றும் சுகாதார முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்கள் பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்புகளில் நடத்தப்படும்.   துண்டுப்பிரசுரங்கள், வீடியோ காட்சிகள், சுவர் ஓவியங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு அம்சங்கள் உள்ளூர் மற்றும் பழங்குடியின மொழிகளில் மேற்கொள்ளப்படும். இந்த விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தை மேற்பார்வையிட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் மாநில அளவிலான அதிகாரிகள் பிரச்சாரம் மற்றும் இயக்கத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்

------

ANU/SM/PLM/KPG

 



(Release ID: 1990307) Visitor Counter : 154