பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டிற்கான ஊனத்தின் வகைகளை மோடி அரசு 3ல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; டாக்டர் ஜிதேந்திர சிங்.

Posted On: 24 DEC 2023 5:38PM by PIB Chennai

மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீட்டிற்கான  ஊனத்தின் பிரிவுகளின் எணிக்கை 3-ல் இருந்து 5-ஆக மோடி அரசால் உயர்த்தப்பட்டுள்ளது .

இந்த தகவலை மத்திய  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தன்னைச் சந்தித்த மாற்றுத் திறனாளிகள் தேசிய அமைப்பின் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

“முந்தைய மூன்று  பிரிவுகளான 1) பார்வையிழப்பு மற்றும் குறைந்த பார்வை கொண்டவர் 2) காது கேளாமை மற்றும் காது கேட்கும் திறன் குறைவாக கொண்டவர்கள் 3) பெருமூளை வாதம், தொழுநோயில் இருந்து குணம் பெற்றவர்,  குள்ளத்தன்மை உள்ளிட்ட இயக்க இயலாமை, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைநார் டிஸ்டிராபி நோய்க்கு ஆளானவர்கள் ஆகிய பிரிவுகளுடன் 4) ஆட்டிசம், அறிவுசார் இயலாமை, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு மற்றும் மன நோய் கொண்டவர்கள் 5) உட்பிரிவுகள் (1) முதல் (4) வரையிலான காது கேளாதோர்-பார்வையின்மை உட்பட அந்த நபர்களிடையே பல குறைபாடுகள் என மேலும் இரண்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன” என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளின்  நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முந்தைய அரசாங்கங்களால் பிரதான நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்ட சமூகத்தின் பிரிவுகளை கவனிப்பதற்கான பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இது உள்ளது என்று அவர் கூறினார்.

2014 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக அவர் பல முயற்சிகளை எடுத்துள்ளார் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

'மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016'-ன் கீழ், மாற்றுத்திறனாளிகளின் பிரிவுகள் 3-ல் இருந்து 5-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், கல்வியில் 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மனித வளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.

குடிமைப் பணிகள் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை, குடிமைப் பணிகள் தேர்வில் தகுதிபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு ஹோம் கேடர் தேர்வுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, உதவியாளர் உதவித் தொகை உயர்வு என அனைத்து நடவடிக்கைகளையும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக இந்த அரசு எடுத்துள்ளது.

மேலும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நீண்ட ஆண்டுகளாக காலியாக இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சுமார் 15,000 பணியிடங்கள் அரசாங்கத்தின் சிறப்பு இயக்கத்தின் கீழ் நிரப்பப்பட்டன. மாற்றுத் திறனாளிகளை   ‘ஊனமுற்றோர்’ என்பதற்குப் பதிலாக 'தெய்வீக பிறவிகள்’ என்று அழைக்க வேண்டும் என ஒரு பெயரை வழங்கியது பிரதமர் மோடியின் யோசனையாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் பிரதமரின் கவலைகளைப் பாராட்டிய தூதுக்குழு, பதவி உயர்வு வாய்ப்புகள் மற்றும் சேவை நிலைமைகளுக்கான உள்ளீடுகளை  பரிந்துரைக்கும் ஒரு மனுவை அமைச்சரிடம் சமர்ப்பித்தது.

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர், பாரா தடகள வீரர்களை மேம்படுத்தி, பாராலிம்பிக்கில் முன்னேற அவர்களை உயர்த்துவதாக உறுதியளித்ததை மத்திய அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

2021 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில், இந்திய பாராலிம்பிக் வீரர்கள் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உட்பட 19 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தனர்.

ஷில்லாங் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறுவனத்தை அரசு அமைத்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திலும், டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்-அப்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவளிக்க கடந்த 9 ஆண்டுகளில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

*******


ANU/AD/BS/DL



(Release ID: 1990131) Visitor Counter : 171