நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரித் துறையில் தன்னிறைவை நோக்கி ; 2023 ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 8.38% அதிகரிப்பு
Posted On:
23 DEC 2023 11:12AM by PIB Chennai
உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோராக இந்தியா உள்ளது. வருடாந்திர மின் தேவை சுமார் 4.7% அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் மின் உற்பத்தி 7.71% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல்-நவம்பர் மாதங்களில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 11.19% அதிகரித்துள்ளது, இது முன்னெப்போதும் இல்லாத வெப்பநிலை அதிகரிப்பு, நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் தாமதமான பருவமழை மற்றும் கொரோனாவுக்குப் பிறகு முழு வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 2023 வரை உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 779.1 பில்லியன் யூனிட்டுகளை எட்டியது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 718.83 பில்லியன் யூனிட்டுகளுடன் 8.38% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
மின்தேவை அதிகரித்த போதிலும், கலப்புக்கான நிலக்கரி இறக்குமதி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 27.21 மெட்ரிக் டன்னில் இருந்து, 44.28 சதவீதம் குறைந்து, 15.16 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதியைக் குறைப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது.
நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும், கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அதன் மூலம் வெளிநாட்டு இருப்புகளைப் பாதுகாக்கவும் அரசு தனது முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
*******
ANU/PKV/DL
(Release ID: 1989842)
Visitor Counter : 87