ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரகப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல்

Posted On: 20 DEC 2023 3:58PM by PIB Chennai

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம்-1ன் கீழ், 99.38% தகுதியான குடியிருப்புகளுக்கு அனைத்து பருவத்துக்கும் ஏற்ற  சாலை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம்-2ன் கீழ், 50,000 கி.மீ., இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 49,857 கி.மீ., அனுமதிக்கப்பட்டு, 48,691 கி.மீ., பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், 12,100 கி.மீ., துாரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 8,290 கி.மீ., பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம்-3ன் கீழ், 1,25,000 கி.மீ., இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 1,07,454 கி.மீ., அனுமதிக்கப்பட்டு, 69,507 கி.மீ., பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 13.12.2023 வரை 8,14,522 கி.மீ நீளமுள்ள 1,86,541 சாலைகளும், 11,587 பாலங்களும் ரூ.3,76,472.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 1,77,628 சாலைகள் ரூ.3,76,472.36 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்திற்காக தண்ணீரை சேமிக்கும் நோக்கத்துடன் 2022 ஏப்ரல் 24 அன்று அமிர்த நீர்நிலை இயக்கம் தொடங்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள 75 அமிர்த நீர்நிலைகள் (குளங்கள்) மேம்பாடு / புத்துயிரூட்டுவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது நாட்டில் மொத்தம் 50,000 அமிர்த நீர்நிலைகளை உருவாக்குகிறது.  

15.12.2023 நிலவரப்படி  தமிழ்நாட்டில் 2325 அமிர்த நீர்நிலைகள் உட்பட நாட்டில் மொத்தம் 68,521 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 1988662)

ANU/PKV/IR/AG/KRS


(Release ID: 1988877) Visitor Counter : 106


Read this release in: English , Urdu , Hindi , Manipuri