மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் ஆசிரியர் குழு படித்துறைகள், சுப்பிரமணிய பாரதியின் இல்லம், காஞ்சி மடம் ஆகியவற்றைப் பார்வையிட்டது
Posted On:
20 DEC 2023 3:48PM by PIB Chennai
2-ம் கட்ட காசி தமிழ் சங்கமத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் (யமுனா) அடங்கிய தூதுக்குழு குழு ஹனுமன் படித்துறைக்குச் சென்று ஆச்சார்யர்களிடமிருந்து கங்கையின் பல்வேறு படித்துறைகளின் வரலாற்றைக் கற்றுக் கொண்டது.
பின்னர், படித்துறையில் உள்ள புராதன கோயில்களை பார்வையிட்ட பிரதிநிதிகள், அவற்றின் வரலாறு, தெய்வீகம், பெருமை ஆகியவற்றை அறிந்து கொண்டனர். ஹனுமான் படித்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் இல்லத்திற்கும் இந்தக் குழு சென்று குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தது. இக்குழுவினர் காஞ்சி மடத்திற்கு சென்று அதன் வரலாற்றை அறிந்து கொண்டனர்.
காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள ஆழமான தொடர்பைப் பற்றி அறிந்த இக்குழு, பல ஆண்டுகளாக பல தமிழ் குடும்பங்கள் வசித்து வரும் ஹனுமன் படித்துறை, கேதார் படித்துறை மற்றும் ஹரிச்சந்திர படித்துறையைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டது, காசி தமிழ் சங்கமத்தின் உணர்வை எடுத்துக்காட்டுகிறது.
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம் 2023 டிசம்பர் 30 வரை நடைபெறும். கடந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமத்தின் முதல் கட்டம் 2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1400 பேர் (தலா 200 பேர் கொண்ட 7 குழுக்கள்) பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு குழுக்கள் ஏற்கனவே வாரணாசிக்கு சென்றுவிட்டன. காசியில் தங்கியிருக்கும் போது, அவர்களின் சுற்றுப்பயணத் திட்டத்தின்படி, அவர்கள் பிரயாக்ராஜ், அயோத்திக்கும் செல்வார்கள்.
***
(Release ID: 1988648)
ANU/PKV/IR/AG/KRS
(Release ID: 1988871)
Visitor Counter : 69