பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பாலின நீதி, மகளிர் அதிகாரமளித்தலை ஊக்குவிப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது

Posted On: 20 DEC 2023 2:28PM by PIB Chennai

பாலின நீதி என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அரசின் ஒரு முக்கியமான கடமையாகும். பாலின சமத்துவ சமுதாயத்தை மேம்படுத்தவும், பல்வேறு துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், அரசு பல ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005', 'வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961', 'குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006', 'பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் (தடை) சட்டம், 1986'; 'பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013', 'சதி தடுப்புச் சட்டம், 1987', 'பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012', 'சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 1/3 பங்கு இடஒதுக்கீடு, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் (பி.ஆர்.ஐ. தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் சைனிக் பள்ளிகள், கமாண்டோ படைகள் போன்றவற்றில் பெண்களைச் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

கடந்த சில ஆண்டுகளாக, புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் பெண்கள் மேம்பாட்டில் இருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா விரைவான மாற்றத்தைக் கண்டு வருகிறது. தற்போது உலகின் 15 நாடுகளில் ஒரு பெண் அரசுத் தலைமையைக் கொண்ட ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது. உலகளவில், உள்ளூர் நிர்வாகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளை இந்தியா அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளது. உலக சராசரியை விட இந்தியாவில் 10% அதிகமான பெண் விமானிகள் உள்ளனர். உலகளவில், சர்வதேச மகளிர் விமான விமானிகள் சங்கத்தின் கூற்றுப்படி, விமானிகளில் சுமார் 5 சதவீதம் பேர் பெண்கள். இந்தியாவில், பெண் விமானிகளின் பங்கு கணிசமாக அதிகமாக உள்ளது - 15 சதவீதத்திற்கும் மேல்.

பொதுவாழ்வில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக 2019 மக்களவைத் தேர்தலில் 81 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் 1.45 மில்லியனுக்கும் அதிகமான அல்லது 46% பெண் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர் (கட்டாய பிரதிநிதித்துவம் 33%). இந்திய அரசியலமைப்பின் 73 மற்றும் 74 வது திருத்தங்கள் (1992) பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் 1/3 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியது.

இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 1988601)

ANU/PKV/IR/AG/KRS



(Release ID: 1988855) Visitor Counter : 91


Read this release in: English , Urdu , Hindi , Telugu