வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்திற்குட்பட்ட வர்த்தகத்துறையின் 2023-ம் ஆண்டு சாதனைகள்

Posted On: 19 DEC 2023 6:14PM by PIB Chennai

பாரத் மண்டபம்

2023-ம் ஆண்டில், வர்த்தகத்திற்கு ஊக்கம் அளிக்கும் முக்கிய அம்சமாக, புதுடெல்லி பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபமான ‘பாரத் மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து  வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பெரிதாக சிந்தியுங்கள், பெரிய திட்டத்தைப் பற்றி கணவு காணுங்கள், பெரிய அளவில் செயல்படுவோம் என்ற கொள்கையின் அடிப்படையில், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்றார்.   அத்துடன் ஜி-20 மாநாட்டு நினைவாக நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.  2,700 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தப் பாரத் மண்டபம், இந்தியாவை சர்வதேச வர்க்க கேந்திரமாக பிரபலப்படுத்த பேருதவியாக இருக்கும். 

 

வெளி வர்த்தக கொள்கை-2023

மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் வெளியிட்ட 2023-ம் ஆண்டுக்கான வெளிவர்த்தகக் கொள்கை, நிவாரண உதவிக்கு ஊக்கத்தொகை, ஏற்றுமதியாளர்கள், மாநில, மாவட்ட அளவிலான மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் ஒத்துழைப்புகள் வாயிலாக ஏற்றுமதி ஊக்குவிப்பு, மின்னணு நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மூலம் வர்த்தகத்தை எளிதாக்குதல் மற்றும் மின்னணு வர்த்தகத்தில் முன்னேறும் மாவட்டங்களை ஏற்றுமதி மண்டலங்களாக அறிவித்தல் போன்ற புதிய வாய்ப்புகள் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது

இந்த புதிய வெளி வர்த்தக கொள்கையின்படி, நிலுவையிலுள்ள பழைய அங்கீகார முறைகளை ஏற்றுமதியாளர்கள் கைவிட்டு, புதிதாக பணிகளை மேற்கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், நிலைச் சான்றிதழ் மற்றும் ஏற்றுமதி அங்கீகாரம் பெறுவதற்கு, ஏற்றுமதியாளர்கள் இனி, வெளி வர்த்தக தலைமை இயக்குனரகத்தை அணுக வேண்டிய அவசியமில்லை.

 வெளி வர்த்தகத்திற்கான தலைமை இயக்குனரகமும், சிவிலியன் பயன்பாட்டுக்கான ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா குட்டி விமானங்களை இந்தியாவிலிருந்து  ஏற்றுமதி  செய்வதற்கான கொள்கைகளை எளிதாக்கி, தளர்த்தியுள்ளது. 

ஜி-20

ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்த காலத்தில், ஜெய்ப்பூரில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ந் தேதிகளில் நடைபெற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில், செயல்பாடு சார்ந்த ஐந்து உறுதியான அம்சங்களில் கருத்தொற்றுமை எட்டப்பட்டது. 

அத்துடன், குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினர், தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறும் நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும், ஜி-20 நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், தொழில் ரீதியான சேவைகளுக்கு பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் மேற்கொள்வதில், சிறந்த நடைமுறைகளை, தாமாக முன்வந்து பகிர்ந்து கொள்ளும் திட்டத்திற்கும், ஜி-20 அமைச்சர்கள் கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்தியா - அமெரிக்கா

இந்தியா – அமெரிக்கா இடையே உலக வர்த்தக அமைப்பு தொடர்பாக நிலவி வந்த ஏழு பிரச்சினைகளுக்கும், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தீர்வு காணப்பட்டது. 

செமி கண்டக்டர் வினியோகச் சங்கிலியை ஏற்படுத்துதல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது, ஒருங்கிணைந்து கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதன் வாயிலாக, புதுமை கண்டுபிடிப்பு சூழலை மேம்படுத்துதல் தொடர்பாக, இந்தியா – அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

 

இந்தியா – யுஏஇ

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான கூட்டுக்குழுவின் முதலாவது கூட்டம் புதுடெல்லியின் ஜுன் 11 மற்றும் 12ந் தேதிகளில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தின்போது, இருநாடுகள் இடையிலான இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகள் முழுமையாக மறுஆய்வு செய்யப்பட்டதுடன், CEPA-ன்படி அமைக்கப்பட்ட குழுக்கள்/துணைக் குழுக்கள் /தொழில்நுட்பக் குழுக்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஒப்புக் கொள்ளப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து அபுதாபியில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், இரு நாடுகளிலும் பரஸ்பர முதலீட்டிற்கான வாய்ப்புகள் மற்றும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதுடன்,  இரு நாடுகளையும் சேர்ந்த முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப்பட்டது. 

இந்தியா – ஆப்பிரிக்கா

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்,  புதுடெல்லியில், ஜுன் 8-ந் தேதியன்று, ஆப்பிரிக்க நாடுகளான அல்ஜீரியா, போட்ஸ்வானா, எகிப்து, கினியா குடியரசு, கென்யா, மலாவி, மொசாம்பிக், மொராக்கோ, ருவாண்டா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, டோகோ, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 15 நாடுகளின் தூதர்களுடன் கலந்துரையானார்.   இந்தக் கலந்துரையாடலின்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, புதிய ஒத்துழைப்புகளை மேற்கொள்வதன் வாயிலாக பரஸ்பர வள்ரச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான யோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அரசு மின்னணு வர்த்தக சந்தை

பெண் தொழில் முனைவோர் மற்றும் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான உமானியா(Womania) திட்டத்தின்படி, GeM (Government e-Market place) எனப்படும் மின்னணு வர்த்தக சந்தை  அமைப்பு, சுய-வேலைவாய்ப்பு பெற்ற மகளிர் குழுவான பாரத் அமைப்புடன் இணைந்து 2023 ஜனவரியில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தியது.  

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (APEDA) 

சிறுதான்யங்களை, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில், லூலு குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.   அத்துடன், ஸ்ரீ அன்னா என்ற பெயரில் சர்வதேச சிறுதானிய மாநாடு ஒன்றும், புதுடெல்லியில் மார்ச் மாதம் நடைபெற்றது.  இதன் மூலம், சிறுதானிய உற்பத்தியாளர்களுக்கு சந்தை இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

வாசனை திரவிய வாரியம்

வாசனை திரவிய வாரியத்தின் சார்பில், உலக வாசனை திரவிய மாநாடு செப்டம்பர் மாதம் நவி மும்பையில் நடைபெற்றது.   அத்துடன், நாட்டில் மஞ்சள் உற்பத்தி மற்றும் மஞ்சள் சார்ந்த பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க, தேசிய மஞ்சள் வாரியம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

 

தேயிலை வாரியம்

உலக உணவு இந்தியா 2023-மாநாட்டில், இந்திய தேயிலை வாரியம் பங்கேற்றது.   இந்த மாநாட்டின் மூலம், பாரம்பரிய அசாம் தேயிலை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஏற்றுமதி

மொத்த்தில், உலகளாவிய ஏற்றுமதி பிரச்சினைகளைக்கு இடையிலும், ஏப்ரல் -நவம்பர் 2023 காலகட்டத்தில், இந்தியாவின் ஏற்றுமதி அபரிமித வளர்ச்சியை  எட்டியுள்ளது.  இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, இந்தக் கால கட்டத்தில் 499.46 பில்லியன் டாலராக இருந்தது.

                                                                    *****

PKV/MM/KRS

(Release ID:  1988357) 

 
 
 


(Release ID: 1988837) Visitor Counter : 61