கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில் 4.0 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

प्रविष्टि तिथि: 19 DEC 2023 2:48PM by PIB Chennai

"இந்திய மூலதன பொருட்கள் துறையில் போட்டித்திறனை மேம்படுத்துதல்" என்ற திட்டத்தின் கீழ், கனரக தொழில்கள் அமைச்சகம் இந்திய தொழில் உற்பத்தியினரிடையே தொழில் வளர்ச்சி 4.0 பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக கருத்தரங்குகள், பயிற்சித் திட்டங்கள், பட்டறைகளை ஏற்பாடு செய்வதற்காக திட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் தொழில் சங்கங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், 2021-22, 2022-23-ம் ஆண்டுகளில் தொழில் 4.0 குறித்து பல்வேறு திட்ட செயலாக்க அமைப்புகள் மற்றும் தொழில்துறை சங்கங்களால் 195 கருத்தரங்குகள்/ பயிற்சி திட்டங்கள் /பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதில் 9000-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இது தவிர, புனேவில் உள்ள சி 4 ஐ 4 ஆய்வகத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன் குஜராத்தின் கெவாடியாவில் 2022, அக்டோபர் 7 அன்று "தொழில் 4.0 குறித்த தேசிய மாநாட்டை" கனரக தொழில் துறை ஏற்பாடு செய்தது. ஐ.ஐ.எஸ்.சி மற்றும் சி.எம்.டி.ஐ பெங்களூருவின் தொழில்நுட்ப ஆதரவுடன் 2023 ஜூலை 3,4 ஆகிய தேதிகளில்  அன்று பெங்களூரில் "ரோபோடிக்ஸ் குறித்த தேசிய மாநாடு" என்ற கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உட்பட அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும் தொழிற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இத்தகவலை மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர்  திரு கிரிஷன் பால் குர்ஜார் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்:

 

***

ANU/PKV/IR/RS/KPG


(रिलीज़ आईडी: 1988241) आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu