நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நட்சத்திரத் தரவரிசை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 18 DEC 2023 2:57PM by PIB Chennai

நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் அசாதாரண செயல்திறனை அங்கீகரிக்கும்  வகையில் 2023, டிசம்பர் 20 அன்று நிலக்கரி அமைச்சகம் மதிப்புமிக்க நட்சத்திரத் தர வரிசை விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.  தொழில்துறை தரங்களை உயர்த்துவதற்கு உறுதியான அர்ப்பணிப்புடன், அமைச்சகம் முக்கிய அளவுகோல்களில் செயல்திறனை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சி, மேம்பாட்டிற்கான நிலக்கரி சுரங்க நடைமுறைகளை ஊக்குவிக்கவும் நன்கு வரையறுக்கப்பட்ட நடைமுறையை செயல்படுத்தியுள்ளது. நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி சிறப்பு விருந்தினராகவும், ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு ராவ்சாகேப் பாட்டீல் தன்வே சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர்.

நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் நிலைத்தன்மை, நிலையான சுரங்க நடைமுறைகளை ஆதரிப்பதன் மூலம் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துதல், சுரங்கங்களிடையே போட்டித்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு நிலக்கரி அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. எனவே, நிலக்கரி சுரங்கங்களின் சிறந்த செயல்திறனை வேறுபடுத்தி அவற்றுக்கு அங்கீகாரம் வழங்க அமைச்சகம் நட்சத்திரத் தர வரிசைக் கொள்கையை வகுத்துள்ளதுஇது ஏழு விரிவான தொகுதிகளில் நட்சத்திரத் தர வரிசை அளவுகோல்களைக் கோடிட்டுக் காட்டுகிறது: "சுரங்க நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் காரணிகள், தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது- சிறந்த சுரங்க நடைமுறைகள், பொருளாதார செயல்திறன், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், தொழிலாளர் தொடர்பான இணக்கம், பாதுகாப்பு.

நட்சத்திரத் தர வரிசை, ஐந்து நட்சத்திரம் முதல் நட்சத்திரம் அல்லாத வகை வரை வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு சுரங்கத்தின் சாதனைகளையும் ஒட்டுமொத்தமாக மதிப்பிடுகிறது. நிலக்கரி சுரங்கங்கள் மூன்று பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகின்றன. நிலத்தடி சுரங்கங்கள், திறந்தவெளி சுரங்கங்கள், கலப்பு சுரங்கங்கள். ஒவ்வொரு அளவுருவிற்கும் மதிப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் பொருந்தக்கூடிய அனைத்து அளவுருக்களின் அதிகபட்ச புள்ளிகளின் தொகையும், மதிப்பெண் பெற்ற புள்ளிகளின் தொகையும் கணக்கிடப்படுகிறது. 91% முதல் 100% வரை மதிப்பெண் பெறும் சுரங்கங்கள் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் (2018-19, 2019-20, 2020-21, 2021-22) மொத்தம் 68 சுரங்கங்கள் 91% க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று 5 நட்சத்திர மதிப்பீட்டிற்குத் தகுதி பெற்றுள்ளனஇதில் 39 சுரங்கங்கள் 1-வது, 2-வது மற்றும் 3-வதுஇடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1987678

---- 

ANU/SMB/IR/KPG/KV

 

 

 

 

 

 

 


(Release ID: 1987741)
Read this release in: Kannada , English , Urdu , Hindi