வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் "பல்வேறு மாநிலங்களில் எளிதான சரக்குப் போக்குவரத்து- (லீட்ஸ்)” என்ற புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டார்


லீட்ஸ் அறிக்கை, இத்துறையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்முறைகளை மேம்படுத்த உதவும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 16 DEC 2023 4:12PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் இன்று ( 16  டிசம்பர் 2023) புதுதில்லியில் "பல்வேறு மாநிலங்களில் எளிதான சரக்குப் போக்குவரத்து (“Logistics Ease Across Different State -LEADS - லீட்ஸ்) 2023" என்ற அறிக்கையை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், சரக்குப் போக்குவரத்துத் துறையில் (லாஜிஸ்டிக்ஸ்) மேலும் புரட்சிகரமான சீர்திருத்தங்களுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு லீட்ஸ் அறிக்கை சில நுண்ணறிவுத் தகவல்களை வழங்குகிறது என்றார். இது வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது இந்த சரக்குப் போக்குவரத்துத் துறை 3.5 டிரில்லியன் டாலராக உள்ளது என்றும் 2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறை  10 மடங்கு வளர்ச்சி அடைந்து 35 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

லீட்ஸ் அறிக்கை, 2018-ஆம் ஆண்டில் உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டுக்கு இணங்க உருவாக்கப்பட்டது. லீட்ஸ்-சின் 5வது பதிப்பு அறிக்கை, மாநில, யூனியன் பிரதேச அளவில் சரக்குப் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதற்கான நுண்ணறிவுகளை வழங்குகிறது.

இந்த அறிக்கை 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023 மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நாடு தழுவிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.

*******


ANU/PKV/PLM/DL


(रिलीज़ आईडी: 1987175) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu