மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பெங்களூரில் நடைபெறும் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் ’ யாத்திரையில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை பங்கேற்கிறார்-மணிகன்ட்ரோல் தளம் நடத்தும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் அவர் உரையாற்றவுள்ளார்

Posted On: 15 DEC 2023 7:52PM by PIB Chennai

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்,  டிசம்பர் 16, 2023 அன்று பெங்களூரில் மணிகன்ட்ரோல் நிதித்துறை இணையதளத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் 'செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு மற்றும் ஒழுங்குமுறை' என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்வில் உலகளாவிய மற்றும் இந்திய நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், செயற்கை நுண்ணறிவுத் துறையின் வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.

பெங்களூருவில் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையிலும் அவர் நாளை (டிசம்பர் 16, 2023) பங்கேற்கவுள்ளார்.  ஏற்கனவே 30 நவம்பர் 2023 அன்று கர்நாடகாவின் சிக்கபல்லாபுராவில் நடந்த யாத்திரையில் அவர் பங்கேற்று, பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

***

ANU/AD/PLM/AG/KRS

 
 
 

(Release ID: 1986916) Visitor Counter : 92


Read this release in: English , Urdu , Hindi